ப்ரன்ஸ் காப்காவின் விசாரணையில்...
- ஆ. பூமிச்செல்வம்
தோற்றுவாய்: பனுவல் உருவாக்கத்தின் போது ''எல்லோருக்கும் பழக்கப்ட்ட சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி யாருக்கும் பழக்கமற்ற அசாதாரண விசயங்களைத் தெரிவியுங்கள்'' 1 என்பது ஜெர்மானியத் தத்துவவாதியான ஆர்தர்ஷோப்பன்ஹேவரின் கருத்து, இத்தகு கருத்தாக்கத்திற்குத் தகுந்தாற்போல் அமைந்தவைகளே ஆஸ்த்திரியாவைத் தாயகமாகக் கொண்டு ஜொமானிய மொழிவூடகத்தின் வழி எழுதிய பிரான்ஸ் காப்காவின் படைப்புகள்.
பிறப்பு, வாழ்வு, மரணம் என்று வரையறுக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டுள்ள மனித வாழ்வின் குறிக்கோள்தான் என்ன? என்பன போன்ற அடிப்படையான கேள்விகளைத் தம் ஊடிழையாகக் கொண்டு திகழ்வனவே காப்காவின் பிரதிகள். மனித வாழ்வு பொருள்வயமாகிவிட்ட சூழலில் தனிமனிதன் தன்னுடைய வாழ்க்கையைத்தான் வாழ்வதற்குப் பதிலாக பொருட்கள், சமுதாய நெறிகள், விதிகள், அமைப்புகள், நிறுவனங்கள், அரசாங்கம், நீதிமன்றம் சட்டங்கள், போன்றவற்றால் நி‘ப்பந்திக்கப்பட்டு வாழவைக்கப்டுகிறான். இவ்வகைப்பட்ட புறக்காரணிகள் தீ‘மானித்துள்ள விதிகளின்படிதான் வாழவண்டும் என்னும் போது அம்மனிதன் தான் ஒரு சுதந்திர ஜீவியாக ஜீவிக்க முடியாது போய் புறவயச் சக்திகளின் கைப்பாவையாக மாறி இறுதியில் தனக்குள்ளேயே உள்ளடங்கி உருவழிந்து போகவேண்டியவனாகி விடுகிறான்.
இப்பிரபஞ்சத்தில் எவ்வொரு நிகழ்வும் காரண காரியமுடன் நிகழாத சூழலில் அ‘த்தமேதுமற்ற இப்பிரபஞ்ச வாழ்வில் எவ்வொரு அ‘த்தமுமின்றியே தம் வாழ்வை வாழ்ந்துவிடடுப் போக மனிதன் சமுதாய விதிகளால் தயாரிக்கப்படுகிறான். இதனால் மனிதனின் அடிபப்டை உரிமைகள் கூட நிராகரிக்கப்டுகின்றன. இவற்றை மையப்படுத்தும் விதமாகப் புனையப்பட்டுள்ள 'விசாரணை'(புதினம்) தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது. இப்பிரதி மனித நசிவி குறித்த கருத்துக்களை தன்னகத்தே கொண்டிலங்குகிறது. இதனை விசாரணை செய்யும் விதத்தில் இவ்வாய்வு அமையப் பெறுகிறது.
நடப்பு நாளின் பின்னிரவில் அணுகுண்டுகள் விழுந்து வெடிக்கப்போகின்ற ஒரு நகரிலிருந்து வெளியேறப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி இரயிலின் கடைப் பெட்டியில் எப்படியாவது இடம் பிடிக்க ஏறத் துடிப்பவர்களைப் போல மக்களானவர்கள் தாங்கள் இவ்வுலகத்தில் எப்படியாயினும் வாழ்ந்திட வேண்டும் என்ற பேரவாவில் முண்டியடித்து வாழப் பிரயத்தனப் பட்டுப் கொண்டிருக்கும் இச்சூழலில் மனிதம் குறித்தும் பேசுவதும் விவாதிப்து அல்லது அது குறித்து விசாரணை செய்வது என்பது ஏற்புடைய ஒன்றாகத்தான் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்டுகிறது.
விசாரணையின் முதன்மைத் தரவு: இரத்தம், சதை, பிணவாடை, மயானச் சூழல், குண்டுச்சத்தம்- 20 ஆம் நூற்றாண்டை உற்று ஸ்பரிசித்து நுகர்ந்து பார்த்தால் இந்த வாசம்தான் வீசும். இவ்வுணர்வாக்கத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு விசாரணையானது மனித நசிவை எங்ஙனம் வெளிப்டுத்துகிறது என்று ஆயப்புகும்போது அவ்விசாரணைக்கு முதன்மைத் தரவாக அமைபவன் க. மற்றும் அவன் மீதான கைது நடவடிக்கை.
விசாரணையின்மையம்: (யோசப்) க.ஒரு நாள் காலை திடீரென்று அவன் அறையில் கைது செய்யப்படுகிறான். அத்துடன் அவன் ஒரு விசாரணைக்குக் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நீதிமன்றத்தில், குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட மணி நேரத்தில் வந்து ஆஜராகும் படியாக நீதிமன்ற உத்தரவையும் பெறுகிறான். இத்தனைக்கும் கா. செய்த குற்றம் தான் என்ன? எது பற்றிய விசாரணை? அவன் மேல் யார் குற்றம் சுமத்துகிறார்கள் என்று எதுவும் அவனுக்குத் தெரியாது. அத்துடன் கைது செய்த காவலர்கள் நீதிமன்றத்தார் போன்ற எவருக்கும் இது குறித்துத் தெரியாது. ஆனால் கைது செய்யப்பட்டது என்னவோ உண்மை. சரி நீதிமன்றத்திற்குச் சென்றால் அங்கு யார் நீதிபதி? யார் பணியாளர்? யார் யார் குற்றவாளி? எந்த மாதிரியான சட்ட நியதிகள் அந்த நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் என்பதெல்லாம் யாருக்கும் தெளிவாகத் தெரியாத விசயங்கள். தர்க்கம் என்று சொல்லப்படுவது அறவே அற்றுப் போய்விட்ட நிலையில் ஒரு மனித மனமானது ஸ்தம்பித்து அடுத்துவரும் ஒவ்வொரு வினாடியும் நடப்பதை நடப்தாகவே ஏற்றுக்கொண்டு அடுத்த விநாடிக்கு நகருகிறது. இதுவே விசாரணையில் மையமாகும்.
விசாரணையில் போக்கு: க. தான் ஜனநாயக ஆட்சியில் வாழ்வதாகவும் நாட்டின் நடப்புகளும் சட்டங்களும் என்றுமே நோமையாகவேதான் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் நம்புவான். இத்தகைய நேர்மையும் வெகுளியான மனப்பான்மையும் கொண்ட க. கைது செய்யப்படும் அளவுக்குச் செய்த குற்றம் தான் என்ன எனின் ஒன்றுமில்லை. அவனுக்கு எந்த முறையில் விசாரணை நடக்கும்? எதுவுமில்லை என்று சொல்லக்கூடியபடி நடக்கும் நீதிமன்றம் எதற்காகக் கூடுகிறது? தங்களது ஒன்றுமின்மையை நிரூபிக்க, சாட்சிகள் யார்? யாருமில்லை நீதிமன்றமாவது இருக்கிறதா? தீர்க்கமாகக் கூறலாம். இருக்கிறது என்று. ஏனெனின் அதுதானே விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
விசாரணையின் நீட்சி: க. குற்றம் செய்யாமல் இருப்பினும் குற்றம் செய்தவனாகத் தீர்மானித்து விசாரணைக்கு அழைக்கப்படும் போது அவன் நீதிபதியிடம் தான் எக்குற்றமும் செய்யா நிரபராதி என வாதிடுகிறான். அதற்கு அந்நீதிபதியோ. '' எனக்கும் இந்த உங்கள் விஷயத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் இல்லாததால் நான் கவலை இல்லாம்ல் நீதி கூறுகிறேன். நீதிமன்றம் என்று கூறப்படும் இடம் உங்களுக்கு பெரும் நன்மை விளையும். ஏனென்றால் எனக்கு நேரமில்லை நான் இங்கிருந்து சீக்கிரமே செல்ல வேண்டும் எனப் பொறுப்பற்ற பதிலளிக்கிறார். இப்பதிலின் வழி-நீதிபதி தான் கூறப்போகும் நீதிக்கு அவர் பொறுப்பாளி அல்ல என்பதும் புலனாகிறது. பின்னர் நீதிபதி அத்துடன் விசாரணயை ஒத்தி வைத்துவிட அடுத்த விசாரணை எப்போது? தான் எவ்வாறு அதில் நடந்து கொள்ள வேண்டும்? என்ற எந்த ஒரு முன் அறிவிப்போ தீர்மானமோ இன்றி க. அலைக் கழிக்கப்படுகிறான். இதனால் அவனுக்குச் சலிப்பும் விரக்தியும் தான் எஞ்சுகிறது.
விசாரணையில் விளைவு: க. ஒரு பெரும் வங்கியின் மேலாளன். நேர்மையான எண்ணமும் நடத்தையும் உடையவன். தன் சுதந்திரம் ஒன்றையே மேன்மையானதாக நினைத்து திருமணம் கூடச் செய்யாது விடுதியில் தனித்து வாழ்பவன். ''முடிந்தவரை எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும் எவ்வளவு அச்சுறுத்தல்கள் வந்தாலும் எதிர்காலத்திற்கென எவ்விதமான முன் ஆயத்தங்களும் செய்து கொள்ளாமலும் வாழ்பவன்'' இவ்வகை மென்னுணர்வு கொண்டவனின் வாழ்வில் நீதிமன்றம் சட்டம் என்ற புறக்காரணிகள் எவ்விதக் காரணமுமின்றி உள்நுழைந்து அவனது சுதந்திரத்தில் தலையிடுகின்றன. விளைவு தன் சுதந்திரத்தை மீட்க பலவிதமான முயற்சியில் ஈடுபட வேண்டியவனாகிறான். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. தன்னுடன் நெருக்கமாகவும் தோழமையுடனும் பழகிய பெண்ணிடம் இருந்து கிடைக்கும் ஏமாற்றம், உறவுகளைச் சொல்லி அதைரியமூட்டும் மாமாவினால் ஏற்படும் வதைப்பாடு, தன் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் பெண் லேனியால் கிடைக்கும் விரக்தில எம்முயற்சியிலும் ஈடுபடாது வழக்கை நீட்டிக்கும் வக்கீளால் உண்டாகும் எரிச்சல், ஓவியனின் எதிர்பார்ப்பிற்கிணங்க நடக்க வேண்டிய நிர்பந்தம், பாதிரியாரிடமிருந்து கிடைக்கும் பயனற்ற உபதேச மொழிகள் என அவனுடன் தொடர்பு கொண்ட அனைவரும் (சட்ட வாதிகள் போன்று) பாதகமானவர்களாகவே செயல்பட்டு அவனது வாழ்வின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு அர்த்தமற்ற வாசினை நோக்கியும் தள்ளிவிடுகின்றனர்.
விசாரணை விவரனை செய்யும் மனித நசிவு: இப்பிரபஞ்சத்தில் எவ்வொரு நிகழ்வும் காரண காரியங்களுடன் நடப்பது இல்லை. அதனால் அர்த்தமேயற்ற அர்த்தமின்றியே வாழ்ந்து அநாதையாக மரித்துப் போகும் ஒருவனாகவே மனிதன் படைக்கப்டுகிறான். இந்நிலையில் அர்த்தமற்ற அதிகார வர்க்கமும் அரசியல் போக்கும் சேர்ந்து மேலும் மனிதனை சிகைத்தகும் செயலைச் செய்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட க. என்ன குற்றமோ, யாரால் அவன் குற்றம் சாட்டப்பட்டடுக் கைது செய்யபட்டானோ என்னவானால் என்ன? தான் குற்றம் செய்தவன் தான் என்ற எண்ணம் அவனுக்கு உருவாகும் வகையில் சட்டம் முதலில் அவனை தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்து விடுகிறது. க.மீதான விசாரணை என்னும் தயவு தாட்சணியமற்ற செயல்பாடு அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பினும் பல சமயங்களில் அவனை மௌனமாக்கும் செயலைச் செய்து வடுகிறது.
மனிதனானவன் தனது வாழ்க்கைவசதிகளுக்காக ஏற்படுத்திக் கொண்ட நியதிக்குள் அவனே சிக்கிக்கொண்டு செயலின்மை பெற்றுவிடும் அவலம் மற்றும் தனி நபரை வதைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களானவை அவருடன் நில்லாமல் படைத்த சமுதாயத்தையும் வதைக்கும் துர்நிலைமை நிரந்தரமாகிவிடுகிறது. மனிதத் தோல்வி, மனித நிராசை, வாழ்தலின் பயங்கரம், சாவின் பரிதாபம் போன்றன க. எனும் தனி மனித அனுபவமாகக் காட்டப்பட்டாலும் சமுதாயத்திற்கான பொதுக்கருத்தாகவே வெளிப்படுகிறது. நிறுவனங்களிடமிருந்து க. போன்றோர் அந்நியமாகிப் போவது மட்டுமின்றி அவை இயங்கும் விதத்தினை எந்த அறிவார்ந்த கருவிகளைக்கொண்டும் அறிய முடிவதில்லை. என்பதும் வாழ்வின் நச்சரிப்பும் இருத்தல் பற்றிய அர்த்தக் குழப்பங்களும் நெட்டித் தள்ளும்போது க. போன்றோருக்கு சுதந்திரம் நிம்மதி உயிர் போன்றவற்றை இழப்பது மிகவும் சகசமான ஒன்றாகி விடுதலும் தேர்கிறது. புறவயமான நிறுவனங்கள் அமைப்புகள் விதிகள் சட்டங்கள் போன்றன மனித சமூகத்தின் அகவயமான உலகைச் சின்னா பின்னப்படுத்திவிடுகின்றன என்பது புலனாகிறது. ''நிறுவனங்களின் மனிதத் தன்மை பற்றி ஆராயுமிடத்து தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னதென்று அறியாமல் நிரூபனம் ஆகாமலேயே கத்தியால் குத்தப்பட்டு ஒரு நாய் போலக் கொல்லப்படும் க. நிஜமான வாழ்வின் அரூப வடிவினன்'' இவனுக்கு ஏற்பட்ட இதுபோன்ற நடப்பு எந்த சாதாரண மனிதனுக்கும் ஏற்படலாம் என்பது வெளிப்டுகிறது.
அத்துடன், ஒருவன் வழக்கில் அறியாது மாட்டிக்கொண்ட பின் அவன் அகப்படுத்தப்பட்ட உடனேயே வழக்கில் தோற்றுவிட்டமை போன்ற மனநிலைக்கு அவனை சட்டமானது ஆக்கிவிடுகிறது. பிறான் சிலுவையை அகப்பட்டவனைச் சுமக்க வைத்துவிடுகிறது. அவனுக்குத் திட்டான விடுதலை என்பது ஒத்திப் போட்டுக் கொண்டே போவதாகத்தான் அவன் இருக்க முடியும் என்பதும் பிறரிடம் உதவிக்காக நிற்கும் போது அவர்களால் ஒரு வத்வாக மட்டுமே நடத்தப்படுகிறான் என்பதும் தெரியலாகிறது. இவற்றிலிருந்து விடுபட்டு தனி மனிதனானவன் தன் சுதந்திரத்தைக் காக்க வேண்டுமெனில் புறக் கோரிக்கைகளை மறுத்து சமுதாய அமைப்புகளிலிருந்து விலகி தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் தனித்தனி அணுக்களாக மாறிவிடுதலே நலம். இதுதான் முற்றான சுதந்திரத்திற்கான வழி என்ற ழான்பால் சார்த்தரின் கூற்று, சரியாக இருப்பினும் நிகழ்காலச் சூழலுக்குச் சாத்தியப்படுமா என்பதற்கு எதிர் காலமே பதிலாக அமையும்.
நிறைவாக: மனிதம் சிதைந்து தன்மேன்மை இழந்து வரும் இக்கால கட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களுடன் தீவிரமாக வாழ்ந்துவிட முயற்சிக்கும் மனித மனம் புறக்காரணிகளால் பாதிப்புற்று வாழ்தலில் அர்த்தமற்ற தன்மையைப் பெற்றுவிட நேர்ந்துவிடுதல், நிறுவப்பட்ட விதிகளால் இயக்கப்பட்டு வாழ்தலை இயந்திரத்தனமாகக் கழிக்க வேண்டியதாகிவிடும், இதனால் தனி மற்றும் குழு மனித மனோபாவங்கள் அந்நியப்பட்டுச் செயலாற்றுவதன் அவசியமின்மையை எட்டி விடுதல் போன்ற பல மனித நசிவுச் செய்ல்களுக்கு விதிகளால் ஆக்கப்பட்ட நிறுவனங்களுடைய ஆதிக்க மனோபாவமே காரணம் என்பது விசாரணையின் (ஆய்கவு) வழி புலனாகிறது.
நன்றி: கட்டுரை மாலை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ப்ரன்ஸ் காப்காவின் விசாரணையில்..., மனித, தான், அவன், குற்றம், விசாரணை, யார், கைது, என்பது, என்ன, கொண்டு, எந்த, அத்துடன், குறிப்பிட்ட, போது, நீதிமன்றம், வாழ்வின், என்பதும், இருப்பினும், அவனை, அர்த்தமற்ற, கொள்ளும், புலனாகிறது, கொண்ட, கிடைக்கும், செய்த, விதிகளால், எவ்வொரு, சமுதாய, இதனால், வேண்டும், நீதிபதி, விசாரணையின், விசாரணையில், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்