முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 1. நான்கு நண்பர்கள்
பஞ்ச தந்திரக் கதைகள் - 1. நான்கு நண்பர்கள்
தெளிவான நீர் ஓடும் கோதாவரிக் கரையில் ஓர் இனிய காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் இலவமரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது!
ஒரு நாள் விடியற்காலையில் அந்தக் காகம் தன் இனத்துடன் ஒரு குளத்தில் போய்க் குளித்து, சிறகு களைக் காய வைத்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு வேடன் வந்து சேர்ந்தான். அவன் தன் கைகளில், வலையும், வில்லும், அம்புகளும் வைத் திருந்தான். வேட்டையாட வந்த அவனைக் கண்டவுடன் எல்லாக் காகங்களும் பறந்து ஓடி விட்டன. இலவமரத்துக் காகம் மட்டும் ஒடவில்லை. இந்தக் கொடியவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று அது ஒரு சோலைக்குள்ளே போய் ஒளிந்து கொண்டது.
அந்த வேடன் வலையை விரித்து வைத்து அதைச் சுற்றித் தீனியும் போட்டு வைத்தான். ஏதா வது பறவைகள் வந்து அகப்படாதா என்று எதிர் பார்த்து அவன் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந் தான். அப்போது புறாக் கூட்டம் ஒன்று அந்த வழியாகப் பறந்து வந்தது. அருகில் இருந்த மரத்தில் இறங்கிய அந்தப் புறாக்கள் கீழே கிடந்த தானியங்களைக் கண்டன.
அந்தப் புறாக்களின் அரசனும் அந்தக் கூட்டத் தோடு வந்திருந்தது. அது மிகுந்த அறிவுள்ளது. அந்த அரசப் புறா தன் கூட்டத்தைப் பார்த்து, ‘காட்டில் தானியம் கிடப்பதென்றால், தானாக வந்து கிடக்காது. யாரோ இதைக் கொண்டு வந்து எதற்காகவோ போட்டு வைத்திருக்க வேண்டும். இதை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் நாம் போய்த் தின்னக் கூடாது. ஆராயாமல் நாம் இதைத் தின்னப் புகுந்தால் புலியால் மாய்ந்த பார்ப்பனன் போலத் துன்ப மடைய நேரிடும் என்று மற்ற புறாக்களை எச்சரித்தது.
அப்போது அந்தப் புறாக்களில் ஒன்று இப்படி ஒவ்வொன்றுக்கும் யோசனை செய்து கொண்டிருந் தால் நாம் இரையே இல்லாமல் இறந்து போக வேண்டியதுதான்! எப்படியும் எந்தெந்தக் காலத்தில் என்னென்ன நடக்க வேண்டுமோ, அந்தந்தக் காலத்தில் அது அது அப்படி அப்படி நடந்தே தீரும் என்று சொல்லியது. உடனே எல்லாப் புறாக்களும் இறங்கித் தீனி தின்னப் போய் வலையில் மாட்டிக் கொண்டன.
இதைக் கண்ட அந்த அரசப்புறா எல்லாப் புறாக்களும் சிக்கிச் சாகும்போது, தான் மட்டும் உயிர் பிழைத்திருப்பது தக்கதல்ல என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, தானும் வலையில் போய் வீழ்ந்து அகப்பட்டுக் கொண்டது.
அப்போது அதன் மனத்தில் ஓர் அருமையான எண்ணம் தோன்றியது.
வேடனிடம் அகப்படாமல் தப்ப வேண்டுமானால், எல்லோரும் இந்த வலையைத் துக்கிக் கொண்டு ஒன்றாகப் பறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசப்புறா மற்ற புறாக்களைப் பார்த்துக் கூறியது.
உடனே எல்லாப் புறாக்களும் கூடிப் பறந்தன. வலையை எடுத்துக் கொண்டு அவை வானத்தில் பறந்ததைக் கண்ட வேடன் கலங்கிப் போனான். புறாக்கள்தான் அகப்படவில்லை என்றால், வலையும் போச்சே என்று மனம் வருந்தினான். -
“இந்தப் புறாக்கள் எவ்வளவு தூரம்தான் இப்படியே பறந்து ஒடப் போகின்றன. விரைவில் களைப் படைந்து கீழே விழத்தான் நேரிடும். அப்போது அவற்றைப் பிடித்துக் கொள்வதோடு வலையையும் திரும்பப் பெறலாம் என்று எண்ணிக் கொண்டு அந்த வேடன் அவற்றின் பின்னாலேயே ஓடினான். ஆனால், அவனுக்குத்தான் விரைவில் களைப்பு வந்ததே தவிர அந்தப் புறாக்கள் களைக்கவே யில்லை. அவை வெகு தொலைவில் பறந்துபோய் அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன.
என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக இலவ மரத்துக் காகமும் பின்னால் பறந்து சென்று கொண்டேயிருந்தது.
வலையோடு புறாக்கள் பறந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு காடு குறுக்கிட்டது. அதைக் கண்டவுடன் அரசப்புறா, எல்லோரும் இங்கே இறங்குங்கள். என் நண்பனான எலி ஒன்று இங்கே இருக்கிறது’ என்று கூறியது. எல்லாப் புறாக்களும் அங்கே இறங்கின.
சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு புறாக்கள் கூட்டமாக இறங்கியதைக் கண்டவுடன், என்னவே ஏதோ என்று பயந்து போன அந்த எலி, தன் வளைக்குள்ளே ஒடிப்போய் ஒளிந்து கொண்டது.
அதன் வளைக்கு நேரே இறங்கிய புறாவரசன், நண்பா, நண்பா என் எலி நண்பா, இங்கே வா’ என்று வளைத்துளையில் மூக்கை வைத்துக்கொண்டு கூப்பிட்டது.
நண்பனின் குரலைக் கேட்டு வெளியில் வந்தது அந்த எலி. அது தன் நண்பன் நிலையைக் கண்டு மனம் வருந்தியது.
‘எதையும் முன்னும் பின்னும் சிந்தித்துச் செய்யக் கூடிய அறிவாளியான நீ எப்படி இந்த வலையில் சிக்கினாய்?’ என்று அந்த எலி கேட்டது.
“எவ்வளவு சிறந்த அறிவிருத்தாலும் எவ்வளவு சாமார்த்தியம் இருந்தாலும் விதியை மீறமுடியுமா? எந்த இடத்தில், எந்தக் காலத்தில் எப்படிப்பட்ட காரணத்தினால், யாரால் எவ்வளவு தல்வினை தீவினைகளின் பயனை அனுபவிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட காரணத்தால், அவரால் அல்வளவும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்!’ என்று புறா பதில் கூறியது.
கடலில் திரியும் மீன்களும், வானில் பறக்குக்ம் பறவைகளும், தம்மைத் தொடர்ந்து வீச்ப்படுகின்ற வலையில் சிக்குகின்றன. குன்று போன்ற பெரிய யானையும், வெம்மையான தன் நஞ்சினால், எவரையும் கொல்லக் கூடிய பாம்பும், நெஞ்சின் நிலை தளர்ந்து தம்மைப் பிடிப்பவர்க்குக் கட்டுப்பட்டு விடுகின்றன. வானில் இருக்கும் பெரும் சுடர்களான கதிர வனும், நிலவும்கூட கிரகணப் பாம்பால் பீடிக்கப் படுகின்றன. அறிவில் மிக்க புலவர்களும் வறுமைக்கு ஆட்படுகின்றனர். அறிவில்லாத அற்பர்களின் கையிலே பெரும் பணம் போய்க் குவிகிறது. எல்லாம் அவரவர் நல்வினை தீவினைகளின் பயனேயாகும், இந்த வினையின் பயனை யாராலும் தள்ளமுடியாது.”
இவ்வாறு கூறிய அந்த எலி, தன் நண்பனான அரசப்புறாவையும் அதன் கூட்டத்தையும் சிக்க வைத்துக் கொண்டிருந்த அந்த வலையைத் தன் கூர்மையான பற்களால் அறுத்தெறிந்து அவற்றை விடுவித்தது. அரசப்புறாவும் அந்த எலியும் ஒன்றுடன் ஒன்று மிக அன்பாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தன. பின் எலியிடம் விடை பெற்றுக்கொண்டு புறாக்கள் பறந்து சென்றன.
அவை சென்றபின் அந்த எலி மீண்டும் தன் வளைக்குள்ளே போய் நுழைந்து கொண்டது.
புறாக்களைத் தொடர்ந்து பறந்து வந்த இலவ மரத்துக் காகத்திற்கு அந்த எலியின் மீது அன்பு பிறந்தது. ஆகவே, அது கீழே இறங்கி வந்து, எலி வளையின் வாயிலில் மூக்கை வவத்து அந்த எலியைக் கூப்பிட்டது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. நான்கு நண்பர்கள் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - அந்த, பறந்து, கொண்டு, புறாக்கள், வந்து, அப்போது, அந்தப், அந்தக், வலையில், புறாக்களும், காலத்தில், எல்லாப், ஒன்று, கொண்டது, போய், வேடன், கூறியது, அரசப்புறா, எவ்வளவு, இங்கே, நண்பா, காகம், வந்தது, கண்டவுடன், நாம், அவன், ஒளிந்து, கீழே