முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் » தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?
தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி? - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முதல் முறையீடு எவ்வாறு எழுதுவது ?
பதில்:
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன்படி, முதல் மேல் முறையீடுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
* முதல் மேல் முறையீட்டு மனு, மத்திய தகவல் அலுவலரிடம் இருந்து முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் முதன்மை மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.முதன்மை மேல் முறையீட்டு அலுவலர்
* முப்பது நாட்களுக்குள் அதற்குண்டான பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணை தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்), மத்திய தகவல் அலுவலரிடமிருந்து பதில் கிடைக்க வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்
* முதல் மேல் முறையீடு மனுவை அனுப்ப வேண்டிய அதிகாரி, அவருடைய முகவரி போன்றவற்றை மத்திய தகவல் அலுவலரிடமிருந்து வந்த பதில் கடித்தத்திலிருந்து கண்டறியலாம். குறிப்பிட்ட துறையின் வலைதளத்திலிருந்தும் இந்த தகவலை பெறலாம்.
* மேற்கண்ட எந்த முயற்சியிலும் தங்களுக்கு முதல் மேல்முறையீட்டு அலுவலரின் விபரம் தெரியவில்லை எனில்,
C/o.தலைமை அலுவலர்,
......துறை க்கு நேரடியாக விண்ணப்பிக்கவும்.
(மேலும் அந்தந்த துறை தலைமை தகவல் அலுவலருக்கும் அனுப்பலாம்).
* நீங்கள் முதல் மேல்முறையீட்டு விசாரணையின் போது இருக்க விருப்பப்பட்டால், முறையீட்டு மனுவின் கீழ் அதனை தெளிவாக குறிப்பிடவும்.கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இரண்டாம் மேல் முறையீட்டு மனு செய்வது எப்படி ?
* முதல் மேல் முறையீட்டிற்கு மத்திய தகவல் துறையின் கீழ்வருபவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
* சில மாநிலங்கள் முதல் மேல் முறையீட்டுகளுக்கு கட்டணங்கள் மற்றும் படிவங்களை வடிவமைத்து உள்ளன.
* அனைத்து இணைக்கப்பட்ட சான்றிதழ்களும் சுயமாக உண்மை நகல் சான்று ஒப்பமிடப்படவேண்டும். Attested என்று எழுதி, அதன் கீழ் கையொப்பமிட்டு பெயர் எழுதப்படவேண்டும்.
* விண்ணப்பத்தின் முழுமையான பிரதியினையும், அனுப்பியதற்கு உண்டான அஞ்சல் ரசீது மற்றும் ஒப்புகையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
* நேரடி விண்ணப்பம் சரியானது, எனினும் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல்/ அஞ்சலக சான்று அஞ்சல் மூலமாக அனுப்புதல் நல்லது. தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பக் கூடாது.
* முதல் மேல் முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவினை விவரிப்பார். தாமதத்திற்கு தகுந்த காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
* முதல் மேல் முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்து பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.
பதில்
* மேல்முறையீட்டு மனுவை பூர்த்தி செய்து, இது வரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களை இணைத்து அனுப்பலாம்.
* மேல்முறையீடு எனில் புகார்/ புகார்தாரர் ஆகியவற்றை நீக்கவும்.
* முதல் மேல்முறையீட்டு மனுவின் நகல் மற்றும் இணைப்புகள் விண்ணப்பம் நிறப்புக் கட்டணமான ரூ. 10-ஐ வங்கி கேட்பு காசோலை/செலுத்துசீட்டு/அஞ்சல் ஆணை/ ரொக்கம் செலுத்திய ரசீது போன்றவை மூலம் செலுத்தலாம்.
* தலைமை தகவல் உரிமை அலுவலரின் தாக்கீது கடிதத்தின் நகல் மற்றும் கட்டணங்கள் அனுப்பியமைக்கான அஞ்சலக சான்று (நகல்)
* அஞ்சலக தபால் ஒப்புகை, மற்றும் தலைமை பொது தகவல் மைய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகை மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகைகள்.
* தலைமை பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட முடிவுரை அறிவுறுத்தல்கள்
* அனைத்து படிவங்களையும், தாள்களையும் குறியீடிட்டு வரிசைப்படுத்தி, ஒவ்வொரு தாளின் வலது பக்க மேல் மூலையில் வரிசையின்படி பக்க எண் குறிப்பிடவேண்டும். இது இரண்டும் மேல்முறையீட்டு மனுவின் முதல் பிரதி ஆகும்.
* மேற்கண்ட அனைத்தையும் நான்கு தொகுப்புகள்/ புகைப் பிரதி எடுக்கப்படவேண்டும்.
* ஒவ்வொரு பக்கத்தின் கீழ் கையொப்பமிடவேண்டும்.
* முகவுரை பக்கம் மற்றும் தாக்கீது விபர பட்டியலிலும் கையொப்பமிட வேண்டும்.
* புகை பிரதிகளின் கீழ், சுய உண்மை நகல் சான்று ஒப்பமிடல் வேண்டும் “உண்மை நகல்” என்று எழுதி அதன்கீழ் கையொப்பமிட்டு அதன் கீழ்முழுப் பெயரை தெளிவாக எழுதுதல் வேண்டும்.
* ஒரு தொகுப்பினை தலைமை தகவல் அலுவலருக்கு பதிவு அஞ்சல் (அ) விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும். முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு ஒரு தொகுப்பும் அனுப்பவேண்டும். அனுப்பியதற்குண்டான ரசீதுகளையும் இணைக்க வேண்டும்.
* முதன்மை விண்ணப்பத்தினை, பதிவு அஞ்சல் மூலமாக (கூரியர் கூடாது) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், மேல், சட்டம், முறையீட்டு, அஞ்சல், உரிமைச், மேல்முறையீட்டு, தலைமை, கீழ், அலுவலரிடம், வேண்டும், பெறும், நகல், பதில், அலுவலர், மத்திய, அறியும், எப்படி, இருந்து, நாட்களுக்குள், பெறப்பட்ட, சான்று, மூலம், உரிமை, பதிவு, மனுவின், நாட்கள், ஆர்டிஐ, சட்டப்படி, அஞ்சலக, இந்தியச், பெறுவது, எனில், முறையீடு, முதன்மை, விண்ணப்பம், விரைவு, | , அனுப்பவும், ரசீது, எழுதி, கையொப்பமிட்டு, இந்திய, அலுவலருக்கு, பக்க, பொது, எழுத்து, தாக்கீது, கூடாது, ஒவ்வொரு, ஒப்புகை, மூலமாக, பிரதி, துறை, right, கிடைக்கப், அலுவலரிடமிருந்து, வேண்டிய, inidan, information, penal, code, கேள்வி, சட்டத்தின், மனுவை, துறையின், தெளிவாக, கட்டணங்கள், அனைத்து, உண்மை, அனுப்பலாம், மேலும், மேற்கண்ட, அலுவலரின், indian, தண்டனைச்