பிரிவு 76 முதல் 106 - இந்திய தண்டனைச் சட்டம் 1860
பிரிவு – 76 : சட்டப்படி கடமையாற்றும் பொது ஊழியர் செயலில் தீங்கு ஏற்பட்டாலும் குற்றமாகாது.
பிரிவு – 77 : சட்டப்படி நீதிபதி தண்டிப்பதால் அவர் செயல் குற்றமாகாது.
பிரிவு – 78 : உத்தரவு (அ) தீர்ப்புப்படி காரியம் செய்பவர் மீது குற்றமாகாது. அம்மன்றத்துக்கு உத்தரவிட அதிகாரமில்லை என்றாலும் குற்றமாகாது.
பிரிவு – 79 : சட்டப்படி கடமையாற்றுகிறவர் நல்லெண்ணத்துடன் சரியானதென நம்பி செய்வதில் எதிர்பாராமல் தவறு நேர்ந்தாலும் குற்றமாகாது.
பிரிவு – 80 : சட்டப்படியும், கருத்துடனும், கவனத்துடனும் குற்றக் கருத்தின்றி செய்யும் செயலால் துன்பம் (அ ) விபத்தானால் குற்றமாகாது.
பிரிவு – 81 : குற்றக் கருத்தின்றி நல்லெண்ணத்துடன் பெரிய தீங்கு நேர்வதைத் தடுக்க செய்யும் சிறு காரியம் மூலம் சிறு தீங்கு நடந்தால் குற்றமாகாது.
பிரிவு – 82 : ஏழு வயதுக்குட்பட்டவர் செயல் குற்றமாகாது.
பிரிவு – 83 : ஏழுமுதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட அறிவு முதிர்ச்சி பெறாதவர் செயல் குற்றமாகாது.
பிரிவு – 84 : சித்த சுவாதீனம் இல்லாதவர் செயல் குற்றமாகாது.
பிரிவு – 85 : போதை நபர் செயல் குற்றமாகாது. ஆனால் போதை அவர் விரும்பி ஏற்றிருக்கக் கூடாது. அறியாமல் வந்திருக்கவேண்டும்.
பிரிவு – 86 : சில சட்டப்பூர்வமான செயல்கள் கருத்தோடும் தெளிவோடும் செய்தால்தான் குற்றமாகும். அவை கூட 85 இ.த.ச. படி பொருந்தும்.
பிரிவு – 87 : 18 வயதுக்கு மேற்பட்ட நபர் சம்மதப்படியான செயலில் துன்பம் நேர்ந்தால் குற்றமாகாது. ஆனால் செயலில் குற்ற நோக்கு கூடாது.
பிரிவு – 88 : ஒருவர் இசைவுடன் அவரது நலனுக்காக நல்லெண்ணத்துடன் செய்யும் செயலில் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.
பிரிவு – 89 : 12 வயதுக்குட்பட்டவர், மன நலம் குன்றியவர் ஆகியோரின் பாதுகாவலரின் சம்மதம் பெற்று அவரது நலனுக்கு செய்யும் காரியம் குற்றமாகாது.
பிரிவு – 90 : தனக்குத் தீங்கு நேரும் அச்சத்தால் சம்மதம் கொடுக்கப்பட்டாலும், விஷயம் புரியாமல் சம்மதம் தந்தாலும் அது சம்மதம் ஆகாது.
பிரிவு – 91 : சில காரியத்தால் தீங்கு நேர்ந்தாலும், நேராவிட்டாலும் அச்செயல் குற்றமாகும். அது சம்மதத்துடன் புரிந்தாலும் குற்றமே. (எ.கா.- கருச்சிதைவு)
பிரிவு – 92 : ஒருவரின் சம்மதம் இல்லாமலே சூழ்நிலை அனுசரித்து அவர் நலனுக்கு நல்லெண்ணத்துடன் செய்யும் காரியம் குற்றமாகாது.
பிரிவு – 93 : நல்லெண்ணத்துடன் ஒரு செய்தியை பிறரிடம் தெரிவிக்கும் செயலால் அந்த நபருக்குத் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.
பிரிவு – 94 : மிரட்டலுக்கு அடங்கி ஒருவர் செய்யும் காரியம் குற்றமாகாது. ஆனால் தானே மிரட்டல் விடுப்பவரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது.
பிரிவு – 95 : மிகச் சிறிய குற்றச் செயலால் மிகச் சிறிய தீங்கு ஏற்பட்டால் அது குற்றமாகாது.
தற்காப்புரிமை
பிரிவு – 96 : தற்காப்புரிமை பயன்படுத்தும்போது எதிரிக்கு ஏற்படும் துன்பம் குற்றமாகாது. ஆனால் தற்காப்புரிமை அத்துமீறக்கூடாது.
பிரிவு – 97: தனது, அதேபோல், பிறரது உடல், உடைமை, காத்துக்கொள்ள தற்காப்புரிமை உள்ளது. இதில் 99 இதச பிரிவின்படி நிபந்தனை உள்ளது.
பிரிவு – 98: இளமை, குடிபோதை, அறிவு தெளிவின்மை, பைத்தியக்காரன், போதைக்காரன், இவர்களிடமும் தற்காப்புரிமை பயன்படுத்தலாம்.
பிரிவு – 99: பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் காரியத்தை எதிர்த்து தற்காப்புரிமை பயன்படுத்தக் கூடாது.
பிரிவு – 100 : -எதிராளி நம்மைத் தாக்கிக் கொலை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படும்போது
-நம் உடலுக்கு எதிரியின் செயலால் கொடுங்காயம் ஏதாவது ஏற்படலாம் என்ற எண்ணம் தோன்றும்போது
-எதிராளி கற்பழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்கும்போது
-இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடைய காம இச்சையை எதிரி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் நெருங்கும்போது
-கடத்திச் செல்ல வேண்டும் என்ற கருத்துடன் நம்மை அண்டியுள்ள ஒருவரை எதிரி தாக்க முனையும்போது
-சட்டவிரோதமாக ஒருவரை எதிரி காவலில் வைப்பதற்கென முயற்சி செய்து அதனினின்றும் சட்டப்பூர்வமான அலுவலர்களை அணுகி விடுதலை பெற முடியாத நிலை ஏற்படும்போது
ஆகிய ஆறுவித சந்தர்ப்பங்களில் எதிரிக்கு மரணம் ஏற்பட்டாலும் தற்காப்புரிமை படி குற்றமல்ல.
பிரிவு – 101: இ.த.ச. பிரிவு – 100-ல் உள்ளபடிதான் எதிரிக்கு மரணம் ஏற்படலாம். இதச 99ன் படி மரணம் குற்றமாகும். மற்றது குற்றமில்லை.
பிரிவு – 102: நமது உடலுக்கு ஆபத்து என்ற அச்சம் தோன்றியதுமே நமக்குத் தற்காப்புரிமை கிடைக்கின்றது.
பிரிவு – 103: ரவில் வீடு இடித்துக் கொள்ளை, தீ, அத்துமீறுதல், திருடுதலால் மரண பயமெனில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் குற்றமாகாது.
பிரிவு – 104 : பிரிவு 103ல் உள்ளது தவிர திருடு, தொல்லை, வரம்பு மீறல், செயலில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் தவிர மற்றது குற்றமாகாது.
பிரிவு – 105: நம் சொத்துக்கு ஆபத்து வரும்போது தற்காப்புரிமை கிடைக்கிறது. ஆபத்து நீங்கியதும் தற்காப்புரிமை இல்லை.
பிரிவு – 106: மரண தாக்குதலின்போது தற்காப்புரிமையில் நிரபராதிக்குத் தீங்கு ஏற்பட்டால் குற்றமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, பிரிவு, குற்றமாகாது, தற்காப்புரிமை, சட்டம், தீங்கு, செய்யும், இந்திய, நல்லெண்ணத்துடன், தண்டனைச், துன்பம், மரணம், காரியம், செயல், சம்மதம், செயலில், எதிரிக்கு, penal, indian, code, ஏற்பட்டால், கூடாது, செயலால், குற்றமாகும், எதிரி, அவர், தற்காப்புரிமையில், சட்டப்படி, உள்ளது, இந்தியச், ஆபத்து, ஏற்படும்போது, எதிராளி, அச்சம், – 100, குற்றமில்லை, தவிர, | , மற்றது, ஒருவரை, ஏற்படலாம், வேண்டும், உடலுக்கு, நபர், நேர்ந்தாலும், குற்றக், கருத்தின்றி, ஏற்பட்டாலும், ஊழியர், inidan, பொது, சிறு, அறிவு, நலனுக்கு, மிகச், அவரது, ஒருவர், போதை, சட்டப்பூர்வமான, சிறிய