பிரிவு 53 முதல் 75 - இந்திய தண்டனைச் சட்டம் 1860

53 - குற்றம் புரிந்தோருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படலாம்?
முதலாவது – மரண தண்டனை
இரண்டாவது – ஆயுள்தண்டனை
மூன்றாவது – நீக்கப்பட்டது
நான்காவது – இரண்டு வகைப்பட்ட சிறைக்காவல்
(1) கடுங்காவல் (2) வெறுங்காவல்
ஐந்தாவது – சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்
ஆறாவது – அபராதம்
53 A – தீவாந்தரத்துக்கு அனுப்புதலின் குறிப்பினைப் பற்றிய பொருள்
54 – மரண தண்டனையை வேறு தண்டனையாக மாற்ற அரசுக்கு உள்ள அதிகாரம்
55 – ஆயுள்தண்டனையை வேறு குறைவான தண்டனையாக மாற்ற அரசுக்கு உள்ள அதிகாரம்
55A – அரசு என்பது மத்திய-மாநில சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனை எதன்பொருட்டு என்பதைப் பொறுத்து மாறுபடும். உரிய அரசு என்பதன் இலக்கணம்.
56 - நீக்கப்பட்டது.
57 – தண்டனைக் கால அளவுகளின் பின்னங்கள்.
58 & 59 – நீக்கப்பட்டது
60 – தீர்ப்புத் தண்டனையை எந்த விதமாகவும் மாற்றி அமைக்கும் அதிகாரம் நீதி மன்றத்துக்கு உண்டு.
61 & 62 – நீக்கப்பட்டது
63 – அபராதத் தொகை – தண்டத் தொகை
64 – அபராதம் செலுத்தாமைக்கு சிறை தண்டனை
65 – சிறைவாசமும், அபராதமும் விதிக்கக்கூடியதாக இருக்கும்போது அபராதம் செலுத்தாமைக்கான சிறைவாசத்துக்கு வரம்பு.
66 – அபராதம் செலுத்தாமைக்கான சிறைவாசத் தண்டனையின் வகை
67 – அபராதம் மட்டும் விதித்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக இருக்கும்போது அபராதம் செலுத்தாமைக்கு சிறைவாசம்
68 – அபராதம் செலுத்தியதும் சிறைவாசம் முடிவுறுதல்
69 – அபராதத் தொகையின் வீதப்பகுதி கட்டப்பட்டதும் சிறைவாசம் முடிவுறுதல்
70 – அபராதம் ஆறு ஆண்டுகளுக்குள் அல்லது சிறைவாசத்தின்போது வசூலிக்கலாகும் என்பது மரணம் ஏற்படுவதால் சொத்து கடப்பாட்டில் இருந்து விடுபடாது.
71 – பல்வேறு குற்றங்கள் சேர்த்த ஒரு குற்றத்துக்குரிய தண்டனையின் வரம்பு
72 – பல்வேறு குற்றங்களில் ஒன்றை செய்தவருக்கு அவற்றில் எந்தக் குற்றத்திற்கு என்பதுபற்றி ஐயமிருப்பதாக தீர்ப்பில் சொல்கிறபோது தண்டனை
73 – சிறையில் தனித்து அடைத்து வைத்தல்
(தனிமை சிறை _ நினைவிருக்கிறதா, பட்டாம்பூச்சி என்கிற தனி மானுட சாசனம்? இதுகாறும் வாசிக்காதவர்கள் தயவு செய்து வாசியுங்கள் ரா. கி.ரங்கராஜன் அவர்களது மொழி பெயர்ப்பில் ஹென்றி ஷாரியர் என்பவரின் சுய சரிதை நூல் வெளியாகி தமிழுக்கு அணி செய்துள்ளது. அதில் தனிமை சிறை குறித்து மிக நீண்ட அனுபவப் பக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன)
74 – தனிமை சிறைவாசத்துக்கான கால வரம்பு
75 - இந்திய தண்டனை சட்டத்தின் பன்னிரெண்டாவது அல்லது பதினேழாவது அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள குற்றத்துக்காக ஒருவர் மூன்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தண்டனை விதிக்கப்பட்டிருந்து மீண்டும் அதே வகையான குற்றங்களைப் புரிந்தால் அவருக்கு ஒவ்வொரு முறையும் ஆயுள் தண்டனை, அல்லது பத்தாண்டுக் காலம் வரை வெறுங்காவல் அல்லது கடுங்காவல் தண்டனை விதிக்கப்படவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, சட்டம், தண்டனை, இந்திய, அபராதம், தண்டனைச், அல்லது, penal, indian, code, வரம்பு, சிறைவாசம், அதிகாரம், சிறை, இந்தியச், பிரிவு, தனிமை, செலுத்தாமைக்கான, இருக்கும்போது, – பல்வேறு, | , செலுத்தாமைக்கு, முடிவுறுதல், தண்டனையின், – அபராதம், உள்ள, தண்டனையை, வேறு, வெறுங்காவல், நீக்கப்பட்டது, inidan, தண்டனையாக, மாற்ற, &, என்பது, அரசு, அரசுக்கு, தொகை