பிரிவு 292 முதல் 294 - இந்திய தண்டனைச் சட்டம் 1860
பிரிவு 292 : ஆபாசமான புத்தகத்தை, விளக்கத்தை, படத்தை, ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும் படி செய்வதும், உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
அத்தகைய ஆபாசமான பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம்
மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உண்டாக்கும் உற்பத்தி செய்யும், வாங்கும், வைத்திருக்கும், இறக்குமதி ஏற்றுமதி செய்யும், பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும் படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவதும் குற்றமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்று கொள்ள தகும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதும் பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும்.இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும். இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும்.
மூன்று மாத சிறைக் காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
விளக்கம்
மத சம்பந்தமான புத்தகம் வெளியீடு, எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும்; கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கியுள்ளவற்றுக்கும் விளக்கப்பட்டுள்ளவையும் இந்த பிரிவில் பொருந்தாது
பிரிவு 292A : 292 ஆம் பிரிவுக்குத் தமிழ்நாடு அரசாங்கம் ஒரு திருத்தத்தை செய்கின்றது. அந்தத் திருத்தத்தின் படி இந்த குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்க்காவலல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்
பிரிவு 293 : இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் என்று கொள்ளத்தக்க ஆபாசப் பொருளை இருபட்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும் வழங்குவதும் காட்டுவதும் அவர்கள் மத்தியில் புழங்க விடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களைப் புரிவதற்கு முயற்ச்சி செய்வதுன் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் படி பொருளை கொடுப்பது மட்டுமல்ல பரப்பினாலும் தண்டனைக்கு உரிய குற்றமாகும். 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படுகின்றது
பிரிவு 294 : பிறருக்குத் தொல்லை தரும் வகையில் பொது இடங்களில் பாடலை பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் , சொன்னாலும் மூன்று மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, அல்லது, சட்டம், பிரிவு, குற்றமாகும், இந்திய, தண்டனைச், செய்வதும், விதிக்கப்படும், அபராதம், குற்றம், மேலே, indian, penal, code, பிறருக்கு, பொருளை, ஆபாசப், இந்தியச், சொல்லப்பட்ட, பொது, இரண்டும், தண்டனையாக, சிறைக், மூன்று, இத்தகைய, | , காவல், செய்ய, விற்பதும், குற்றத்துக்கு, செய்யும், inidan, உற்பத்தி, ஆபாசமான, காட்டுவதும், காரணங்களுக்காக, இறக்குமதி, பிரிவின், வழங்குவதும், ஏற்றுமதி, கீழ்