முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » இந்திய தண்டனைச் சட்டம் 1860 » பிரிவு 21 - பொது ஊழியர்
பிரிவு 21 - பொது ஊழியர் - இந்திய தண்டனைச் சட்டம் 1860
பிரிவு – 21: பொது ஊழியர்
பொது ஊழியர் என்ற சொல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் குறிக்கும்.
முதலாவது:- நீக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது:- இந்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளிலுள்ள அலுவலர்கள்.
மூன்றாவது:- ஒவ்வொரு நீதிபதியும், (நீதிமன்ற ஊழியர்களும்) சட்டத்தை முன்வைத்து நீதிமுறையாக அலுவல்கள் ஆற்றுவதற்கு சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களும்.
நான்காவது:- சட்டப்பிரச்சினை மற்றும் வேறு விவகாரங்களைப் பற்றி பரிசீலித்தல், புலனாய்வு செய்தல், ஆவணங்களை வைத்திருத்தல் அவற்றை உறுதிப்படுத்துதல், எந்த சொத்தையாவது பொறுப்பில் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அதைப் பற்றி முடிவு செய்தல், நீதிமுறைக் கட்டளைகளை அல்லது பிரமாணத்தைப் புகுத்துதல் அல்லது மொழி பெயர்த்தல் அல்லது நீதி மன்ற உத்தரவுகளை நிலைநாட்டுதல், நீதிமன்றத்தால் தனியாக இதற்கென்றே நியமிக்கப்பட்ட அலுவலர்.
ஐந்தாவது:- நீதிமன்றத்திற்கும் பொது ஊழியருக்கும் உதவுகின்ற பஞ்சாயத்துதாரர் (jury ) அல்லது மதிப்பீட்டாளர்(Assessor) அல்லது முறைகாண் ஆயத்தின் உறுப்பினர்(jury man). ஆறாவது:- நீதிமன்றம் அல்லது தகுதி பெற்ற பொது அலுவலர் என்று கூறப் படுபவரால் வழக்கு முடிவு செய்வதற்காக அல்லது மத்தியஸ்தர் என்று நியமிக்கப்பட்டவர் அல்லது வேறு எந்த ஒரு நபராக இருந்தாலும்.
ஏழாவது:- ஒரு நபரை வைத்திருக்கவோ அல்லது அடைத்து வைத்திருக்கவோ அதிகாரம் அளிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்ட நபர் (உ.ம்.காவல்துறை)
எட்டாவது:- குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றங்களைப்பற்றி தகவல் கொடுப்பதற்கும் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்குமுன் கொண்டு வந்து நிறுத்துவதற்கும், பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும், பாதுகாப்பு அல்லது வசதியைக் காப்பதற்காகவும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் (உ.ம்.காவல்துறை)
ஒன்பதாவது:- அரசின் சார்பில் எந்தச் சொத்தையும் எடுத்துக் கொள்ளவும், வைத்துக் கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் அல்லது அரசின் சார்பாக நிலங்களை அளக்கவும், மதிப்பிடவும், ஒப்பந்தம் செய்துகொள்ளவும், வருவாய்த்துறை கட்டளைகளை நிறைவேற்றுவதையும், அரசின் நலனைப் பாதிக்கின்ற விஷயம் எதைப்பற்றியும் பரிசீலனை செய்வதையும் அரசின் நிதி சம்மந்தமாக பத்திரம் எதுவும் தயார் செய்வதை உறுதி செய்வதையும் அல்லது அவற்றை வைத்து வருவதையும் அரசாங்கத்தின் நிதி நலன்களை பாதுகாக்கின்ற சட்டம் எதனையும் மீறுவதைத் தடுப்பதைத் தன் கடமை என கருதும் அலுவலர்.(i.e. revenue dept.)
பத்தாவது:- சொத்து எதையும் எடுப்பது, பெற்றுக்கொள்வது, வைத்துக் கொள்வது அல்லது செலவிடுவது அல்லது அரசாங்கத்தின் சார்பாக நிலங்களை அளக்கவும் மதிப்பிடவும் அல்லது தீர்வை அல்லது வரி எதையும் விதிப்பதை கிராமம், நகரம், மாவட்டம் இவற்றில் மக்களுடைய உரிமைகளை உறுதியாகத் தெரிந்து கொள்வதற்காக பத்திரம் தயார் செய்வதை அல்லது வைத்து வருவதைக் கடமையாகக் கொண்ட அலுவலர்.
பதினொன்றாவது:- வாக்காளர் பட்டியல் தயாரிக்க, வெளியிட, திருத்தம் செய்தல், வைத்திருத்தல் அல்லது தேர்தலை நடத்தவோ தேர்தலின் ஒரு பகுதியை நடத்தவோ அதிகாரமளிக்கப்பட்டு பதவி வகிக்கின்றவர்.(உ.ம். தேர்தல் ஆணைய ஊழியர், தேர்தலுக்கென பணியமர்த்தப்படுபவர்)
பன்னிரண்டாவது:- அரசின் ஊழியத்திலுள்ள அல்லது அரசிடம் ஊதியம் பெறுகின்ற அல்லது பொதுவான கடமைகள் எதையும் செய்வதற்காக அரசாங்கத்திடம் கட்டணங்கள் அல்லது தரகு என்கிற பெயரில் ஊதியம் பெறுகிறவர்.
ஒரு தல நிர்வாகத்தின் அல்லது மத்திய அல்லது மாநிலச் சட்டத்தின் கீழ் அல்லது அதன் கீழ் நிறுவப்பட்ட ஒரு கூட்டு நிறுவனத்தின் அல்லது 1956ம் ஆண்டு வணிக நிறுவன சட்டப்பிரிவு 617ல் கூறப்பட்டுள்ளபடியான ஓர் அரசு வணிக நிறுவனத்தின் ஊழியத்தில் உள்ளவர் அல்லது அதனிடம் சம்பளம் வாங்குகிறவர். (உ.ம். ஒரு நகராட்சி ஆணையாளர் ஒரு பொது ஊழியரே)
விளக்கம்-1:- மேற்கூறிய ஊழியர்கள் அனைவரும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தாலும், நியமிக்கப்படவில்லை என்றாலும் பொது ஊழியர்களே ஆவர்.
விளக்கம்-2:- சட்டமன்ற உறுப்பினர்கள்; நகர சபை உறுப்பினர்கள் அல்லது வேறு ஏதாவது பொது அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்தல் ஆணையம் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுள்ள சட்டத்தின்படி நடைபெறும் தேர்தலையும் இங்குள்ள தேர்தல் என்ற சொல் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, அல்லது, பொது, சட்டம், இந்திய, தண்டனைச், ஊழியர், அலுவலர், அரசின், பிரிவு, code, penal, indian, வேறு, செய்தல், தேர்தல், இந்தியச், எதையும், செய்வதை, மதிப்பிடவும், அளக்கவும், செய்வதையும், நிதி, பத்திரம், தயார், கீழ், வணிக, விளக்கம், உறுப்பினர்கள், | , நிறுவனத்தின், நிலங்களை, அரசாங்கத்தின், நடத்தவோ, ஊதியம், வைத்து, செய்வதற்காக, வைத்திருத்தல், அவற்றை, எந்த, பற்றி, அதிகாரம், inidan, சொல், குறிக்கும், எடுத்துக், முடிவு, அரசாங்கத்தால், கொள்ளவும், வைத்துக், காவல்துறை, வைத்திருக்கவோ, கட்டளைகளை, நியமிக்கப்பட்ட, jury, சார்பாக