கேள்வி எண் 9 - சட்டக்கேள்விகள் 100
9. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்த பின், விரும்பினால் சேர்ந்து வாழ முடியுமா?
ஐயா, எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக நான் இரண்டு வருடத்திற்கு முன்பு 2011ல் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜீவனாம்சம் வழக்கும் தொடுத்து கோர்ட் உத்தரவுப்படி ஜீவனாம்சமும் வாங்கி வருகிறேன். தற்போது என் கணவர் என்னிடம் நேரடியாக வந்து நான் திருந்திவிட்டேன், இனி நாம் சேர்ந்து வாழ்வோம், இனி தவறு செய்யமாட்டேன் என்று என்னை அழைக்கிறார், எனக்கு அப்பா கிடையாது, அம்மாவும் மீண்டும் சேர்ந்து வாழும்படி கூறுகிறார். நான் மீண்டும் சேர முடியுமா- என்று என் வழக்குரைஞரைக் கேட்டால் அது கடினம் என்கிறார். நான் என்ன செய்வ தென்று தெரியாமல் பெரிய மனக்குழப்பத்தில் இருக்கிறேன். நான் இதற்கு என்ன செய்யலாம் என்று ஐயா அவர்கள் அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும்...
- தமிழ்ச்செல்வி, சென்னை
பதில் :
இந்த கேள்விக்கு நான் வழக்குரைஞராக பதிலளிப்பதை விட, ஒரு சராசரி மனிதனாக பதிலளிக்கவே விரும்புகிறேன். தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து வழக்கு என்பது அதிகபட்சம் அவசர கதியில் எடுக்கப்படுகின்ற முடிவாகவே நான் கருதுகிறேன். சற்றே சிந்தித்து, செயல்பட்டால் விவாகரத்து அவசியமிருக்காது. மேலும் தங்கள் விஷயத்தில் ஜீவனாம்சமும் பெற்று வருவதாக கூறியிருக்கிறீர்கள்.
இருப்பினும் உங்களுடன் வாழ தீர்மானித்து உங்கள் கணவர் உங்களிடம் மன்னிப்பு கேட்கின்றபட்சத்தில் நீங்கள் அவருடன் திரும்ப சேர்ந்து வாழ்வதே நலம் என்பது என் கருத்து. விவாகரத்து வழக்கு தொடுத்ததனால் திரும்ப சேர்ந்து வாழ முடியாது என்று அர்த்தமில்லை. விவாகரத்து வழக்கின் காலதாமதத்திற்கான காரணமே நீங்கள் மீண்டும் சேர்ந்து வாழமாட்டீர்களா என்ற நீதிமன்றத்தின் ஆசைதான்.
உங்கள் வழக்குரைஞர் எந்தவிதத்திலும் இதற்கு முட்டுக்கட்டை போட முடியாது. நீங்களே நீதிமன்றத்தில் நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்று நேரடியாக தெரிவிக்கலாம், வழக்கையும் திரும்பப் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், சேர்ந்து, விவாகரத்து, வழக்கு, மீண்டும், இதற்கு, என்ன, என்பது, திரும்ப, முடியாது, நீங்கள், உங்கள், ஜீவனாம்சமும், எனக்கு, முடியுமா, கருத்து, தற்போது, கணவர், நீதிமன்றத்தில், நேரடியாக