கேள்வி எண் 74 - சட்டக்கேள்விகள் 100
74. என் மனைவி என்னை என் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். அவள் ஒரு அரசு அதிகாரி, இதற்கு என்ன தீர்வு?
என்னுடைய மனைவியும் அவளுடைய தம்பியும், என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டிலிருந்து என்னை விரட்டி விட்டார்கள், நான் வீட்டிற்குச் செல்ல முயன்றால் என்மீது கற்பழிப்பு மற்றும் டார்ச்சர் வழக்கு தொடுத்து விடுவதாக மிரட்டுகிறார்கள். அதனால் கடந்த 5 வருடங்களாக நான் உள்ளே செல்வதில்லை, தற்போது குழந்தைகளை காரணம் காட்டி ஜீவனாம்ச வழக்கு தொடுத்துள்ளனர். என் மனைவி அரசு அதிகாரி. என் வீட்டில் இருந்து கொண்டு இவர்கள் செய்யும் இச்செயல்களை எவ்வாறு நான் எதிர்கொள்வது?
- வெ.சுந்தரராமன், சென்னை
பதில் :
உங்களது வீடு உங்கள் பெயரில் இருக்கும்வரை நீங்கள் தான் அந்த சொத்திற்கு முழு உரிமையாளர். அதனால் பயப்பட வேண்டாம். உங்களுக்கான உரிமையை நீங்கள் சட்டப்படி பெற முடியும். உங்கள் மனைவியின் தம்பியை நீங்கள் சட்டப்படி வெளியேற்ற முடியும். மேலும் உங்கள் மனைவி தனியாக இருக்கிறார். அதே சமயத்தில் வேலையில் உள்ளார் என்று கூறியிருக்கிறீர்கள். அதனால் குழந்தையை காரணம் காட்டி எழுப்பப்பட்ட ஜீவனாம்ச வழக்கிற்கு இங்கு எவ்விதத்திலும் முகாந்திரம் கிடையாது. நீங்கள் ஒரு நல்ல குடும்பநல வழக்கறிஞரை அணுகுவதன் மூலம் இவை அனைத்தையும் மிக எளிதில் எதிர்கொள்ள முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நீங்கள், மனைவி, அதனால், நான், உங்கள், முடியும், சட்டப்படி, காட்டி, ஜீவனாம்ச, வழக்கு, வீட்டிலிருந்து, என்னை, அரசு, அதிகாரி, என்னுடைய, காரணம்