கேள்வி எண் 3 - சட்டக்கேள்விகள் 100
3. பிரிவு 337 மற்றும் 279-ல் குற்றம் சாட்டப்பட்ட நான் வெளிநாடு செல்லலாமா?
வணக்கம் வழக்குரைஞர் ஐயா, தங்களுடைய லாயர்ஸ் லைன் பத்திரிகையின் வாசகர் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். உங்கள் சேவை வளர என் வாழ்த்துக்கள். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னால் ஒரு விபத்து வழக்கில் பிரிவு 337 மற்றும் 279ல் என்மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எனக்கு சம்மன் வரவில்லை. நான் வெளிநாடு செல்வதற்காக கடந்த ஒரு வருடமாக காத்திருக்கிறேன். இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து கூறவும்.
- கே.நரசிம்மன், இராஜபாளையம்
பதில் :
நீங்கள் உரிய நீதிமன்றத்தில் ஒரு அனுமதி ஆணை பெறுவதன் மூலம் வெளிநாட்டிற்கு தாராளமாக செல்லலாம். அதற்கான உரிய விண்ணப்பத்தை நீங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உங்களுக்கு அருகிலுள்ள வழக்குரைஞரை அணுகி இதைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், நீங்கள், உரிய, வேண்டும், நீதிமன்றத்தில், கடந்த, குற்றம், வெளிநாடு, பிரிவு, செய்ய