கேள்வி எண் 24 - சட்டக்கேள்விகள் 100
24. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட என் மனைவியிடமிருந்து என் குழந்தையைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு முஸ்லிம் (ஜமாத்) முறைப்படி 2007ல் திருமணம் நடைபெற்றது. எங்கள் திருமண தாம்பத்ய உறவின் மூலம் 5வயது பெண் குழந்தை இப்போது உள்ளது. இதற்கிடையில் என் மனைவி சென்ற வருடம் மே மாதம் தவறான தொடர்பு மூலம் இன்னொரு நபருடன் சென்று விட்டாள். அவர் மூலம் தற்போது 3 மாத பெண் குழந்தையும் பெற்றுள்ளார். இதனால் இரு ஜமாத்தார், குடும்பத்தார் முன்னிலையில் எங்களுக்கு (தலாக்) விவாக ரத்து பெற்றுவிட்டோம். தற்போது எனக்கும் என் முன்னாள் மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என் மகள் என் முன்னாள் மனைவியின் தாய்/தந்தை யிடம்தான் உள்ளது. நான் என் குடும்பத்தார் ஜமாத் மூலமும், காவல் நிலையம் மூலமும் ஒரு வருடமாக கேட்டுப்பார்த்தும் எந்த பலனும் இல்லை. குழந்தையை தர மறுக்கிறார்கள். இதனால்தான் நான் இன்னும் மறுமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தை தாயிடமும் இல்லை. தாய் இந்து நபரை திருமணம் செய்து கொண்டு இந்துவாக வாழ்ந்து வருகிறாள்.
என் குழந்தையின் எதிர்காலம் கருதி, குழந்தை யாரிடம் இருக்க வேண்டும், யார் வளர்க்க வேண்டும், யாருக்கு உரிமை உண்டு என்ற கேள்விகளுடன் உங்களை அணுகுகிறேன். எனக்கு குடும்பநலநீதிமன்றம் செல்ல வசதியில்லை.
- A. காதர்உசேன். கல்பாக்கம்
பதில் :
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. பொதுவாக குழந்தை 7 வயது வரை தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இயல்பு. ஆனால் உங்கள் விஷயத்தை பொறுத்தவரை உங்கள் குழந்தை உங்கள்வசம் வர பல முகாந்திரங்கள் உள்ளன.
1. உங்கள் மனைவி மறு திருமணம் செய்திருப்பது, மற்றும் இன்னொரு குழந்தை பெற்றிருப்பது
2. உங்கள் மனைவி இந்துவாக மதம் மாறி திருமணம் செய்திருப்பது
3. உங்கள் குழந்தை தற்போது தாயின் அரவணைப்பில் இல்லாமல் தாத்தா, பாட்டியிடம் இருப்பது
நீங்கள் ஒரு நல்ல குடும்ப வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் உங்கள் மகளை நிச்சயமாக பெற முடியும். வசதி யில்லை என்று கூறியிருந்தீர்கள். ஒ வ்வொரு குடும்ப நல நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அவர்களை நீங்கள் அணுகினாலே போதும். உங்களுக்கு அரசு உதவியுடன் இலவசமாக சேவை செய்ய காத்திருக்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், குழந்தை, திருமணம், மூலம், தற்போது, மனைவி, இல்லை, நான், எனக்கு, இந்துவாக, வேண்டும், செய்திருப்பது, குடும்ப, நீங்கள், செய்து, தாயின், முன்னாள், உள்ளது, பெண், ஜமாத், இன்னொரு, குடும்பத்தார், தாய், எந்த, மூலமும்