கேள்வி எண் 20 - சட்டக்கேள்விகள் 100
20. குழந்தையின் நலனுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யலாமா?
சார், கடந்த 2001ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் காதல் திருமணம். தற்போது 9 வயதில் எனக்கு பெண் குழந்தை உள்ளது. என் மனைவி கடந்த 2004 ஆம் ஆண்டு இன்னொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு சென்று விட்டாள். இன்றுவரை எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய குழந்தையின் நலனுக்காக நான் இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று ஏற்பாடுகள் செய்யும் போது என் மனைவியின் சகோதரன் போலீசில் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். நான் சட்டப்படி இரண்டாம் திருமணம் செய்யலாமா -?
-E. திருலோகச்சந்தர், இளையான்குடி
பதில் :
இந்திய திருமணச் சட்டப்படி கணவனோ அல்லது மனைவியோ இருவரில் ஒருவர் 7 வருடங்களுக்கு மிகாமல் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கருதப்படுகிறது. இதனால் உரிய நீதிமன்றத்தை அணுகி இத்தனை வருட காலங்கள் உங்களுடன் உங்கள் மனைவி இல்லாத நிகழ்வினை சரியான முறையில் நிரூபிப்பதன் மூலம் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்ய முழு தகுதியுள்ளவராவீர்கள். நல்ல குடும்ப வழக்குரைஞரை அணுகி இவற்றுக்கான ஆணையை நீங்கள் பெறமுடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், இரண்டாவது, இல்லை, தொடர்பும், நான், அணுகி, நீங்கள், எந்த, சட்டப்படி, எனக்கு, செய்யலாமா, நலனுக்காக, கடந்த, ஆண்டு, குழந்தையின், மனைவி