கேள்வி எண் 14 - சட்டக்கேள்விகள் 100
14. மனைவி ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரியவந்தால் அதைவைத்து விவாகரத்து கோரலாமா?
அய்யா வணக்கம். எனக்கு திருமணம் நடைபெற்று 2 வருடம் ஆகிறது. என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டனர். என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. அதை என்னிடம் மறைத்து, திருமணம் ஏற்பாடு செய்து அதனை சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்து விட்டார்கள். இந்த விஷயம் தெரிந்த பிறகு அவள் என்னிடமிருந்து விலகி விட்டாள். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மேலும் அவள் என்னை விட வயதில் 6 வயது மூத்தவர். தற்போது என்னுடைய வயது 31. அவளுக்கு 37 வயது ஆகிறது. எனக்கு விவாகரத்து கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு ஒரு நல்ல வழி சொல்லவும்.
- சி. சந்திரமோகன், காஞ்சிபுரம்.
பதில் :
உங்கள் மனைவி ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பதை நீங்கள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபணம் செய்யும் பட்சத்தில் நீங்கள் வெகு விரைவாக விவாகரத்து பெற முடியும். அதே நேரத்தில் உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாக கூறியுள்ளீர்கள். அந்த குழந்தையின் எதிர் காலத்தையும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்லது. நீங்கள் ஒரு நல்ல குடும்ப வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் விரைவில் தீர்வுகாண இயலும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், வயது, குழந்தை, நீங்கள், விவாகரத்து, எனக்கு, நல்ல, செய்து, அவள், உள்ளது, என்னுடைய, நடைபெற்று, ஆகிறது, என்னை, மனைவி, ஏற்கனவே