கேள்வி எண் 12 - சட்டக்கேள்விகள் 100
12. கணவர், தன் முதல் திருமணத்தை மறைத்தது தெரியவந்த பின், அவர் மீது வழக்கு தொடரலாமா?
சார், நான் சிறுவயதிலிருந்தே என் சித்தியிடம்தான் வளர்ந்தேன், தாய் தந்தையை நான் பார்த்ததே இல்லை, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன் மூலம் எனக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. என் கணவர் ஏற்கெனவே திருமணமானவர். அவருடைய முதல் மனைவிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன என்ற செய்தி சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது. இது தெரிந்ததும் என் சித்தியிடம் முறையிட்டேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை, என் கணவரை கேட்டவுடன் என்னை அடித்து விரட்டிவிட்டார். நீ எனக்கு மனைவி இல்லை இனி இங்கு வரக்கூடாது என்று விரட்டி விட்டார். தற்போது நானும் என் குழந்தையும் தனிமையில் வாடுகிறோம். எனக்கு நீதி கிடைக்க என்ன வழி -?
- K.சுந்தரவள்ளி, அருர்.
பதில் :
உங்கள் விஷயத்தில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணவர் இரண்டாவது திருமணம் செய்திருப்பது தெரிகிறது. இந்திய திருமணச் சட்டப்படி இரண்டு திருமணம் செய்தல் (Bigamy) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494ன் கீழ் குற்றமாகும். நீங்கள் உடனே காவல் துறையை அணுகி அவர்மீது வழக்கு தொடரச் செய்யலாம். இரண்டு திருமணங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.
மேலும், நீங்கள் இரண்டாவது மனைவியே ஆனாலும் அவர் முறையாக திருமணம் செய்த பட்சத்தில் உங்களுக்கு பிறந்த பெண் குழந்தையும் அவருடைய முறையான வாரீசு ஆவார். உங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தவறும்பட்சத்தில் ஒரு குடும்பநல வழக்குரைஞரை தொடர்பு கொண்டு நீங்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய நீதியைப் பெறலாம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், எனக்கு, பெண், கணவர், இல்லை, நீங்கள், இரண்டு, இந்திய, அவருக்கு, இரண்டாவது, அணுகி, உள்ளது, வழக்கு, அவர், நான், அவருடைய, குழந்தையும், உங்கள்