கேள்வி எண் 10 - சட்டக்கேள்விகள் 100
10. திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளி எப்படி காவல்துறை தொந்தரவிலிருந்து மீள்வது?
நான் கிருஷ்ணகிரியில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள், அதில் ஒரு மகன் பட்டப்படிப்பு முடித்து ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறான். இன்னொரு மகன் படிக்கவில்லை. சில காலங்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து தவறான வழியில் சென்று கொண்டிருந்தான். தற்போது சிலரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு கம்பெனியில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கிறான். இவன் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த நாட்களில் தவறு செய்ததற்காக போலிசாரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.இதை காரணம் காட்டி அடிக்கடி காவல்நிலையத்தில் என் மகனைத் தேடி வீட்டிற்கு வந்து, “அங்கே திருட்டு நடந்துள்ளது, சைக்கிள் காணோம், பைக் காணோம் உன் மகன் எங்கே?” என்று தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை, நான் என்ன செய்வது?
- B.தங்கம்மாள், கிருஷ்ணகிரி
பதில் :
உங்கள் மகன் கடந்த காலங்களில் செய்த தவறுக்கான வழக்கு நிலுவையில் இருந்தால் வழக்கு நிமித்தமாக காவல் துறையினர் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் மகனை தேடி வரலாம். இது எதார்த்தமான நடைமுறைதான்.
ஆனால் அதையே காரணம் காட்டி அடுத்தடுத்த திருட்டுகளுக்காக தொந்தரவு செய்கிறார்கள் என்றால் நீங்களே உங்கள் மகனையும் அழைத்துக்கொண்டு காவல் உயர்அதிகாரியை நேரில் சந்தித்து விவரத்தை எடுத்துச் சொல்லலாம். அங்கும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் ஒரு வழக்குரைஞர் மூலம் இது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மகன், உங்கள், தொந்தரவு, காணோம், வழக்கு, காவல், தேடி, காரணம், வேலை, கம்பெனியில், நண்பர்களுடன், உண்டு, நான், காட்டி