ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கம்போடியாவில் இந்தியர்கள் குடியேறினர். கெமர்கள் என்றழைக்கப்பட்ட அம்மண்ணின் மைந்தர்கள்மீது பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களது அரசகுலம் காம்போஜர்கள் என்றும், நாடு காம்போஐம் அல்லது தற்கால கம்போடியா என்றும் அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் அங்கு வைணவமும் சைவமும் தழைத்தோங்கின. லாவோஸ், சியாம், பர்மாவின் ஒரு பகுதி, மலேயா தீபகற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காம்போஜப் பேரரசு ஒரு காலகட்டத்தில் திகழ்ந்தது. அங்கு ஆட்சிபுரிந்த அரசர்கள்பற்றி எண்ணற்ற வடமொழிக் கல்வெட்டுகள் விவரங்களைத் தருகின்றன. வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், பாணினியின் இலக்கணம், இந்து தத்துவ விளக்கவுரைகள் போன்ற இந்து இலக்கியப் படைப்புகளை கம்போடிய மக்கள் அறிந்திருந்தனர்.
![]() |
அங்கார் வாட் கோயில் |
சம்பா
சம்பா அல்லது தெற்கு அன்னாம் கம்போடியாவிற்கு கிழக்கே அமைந்துள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஸ்ரீமாறன் என்பவரால் அங்கு முதலாவது இந்து அரசகுலம் நிறுவப்பட்டது. ஏராளமான வடமொழிக் கல்வெட்டுகள் சம்பாவின் வரலாற்றைக் கூறுகின்றன. பன்னிரண்டு இந்திய அரசு குலங்கள் சம்பாவில் ஆட்சிபுரிந்தன. பதிமூன்றாம் நூற்றாண்டில் சம்பா, கம்போடியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்து அரசர்களின் ஆட்சிக் காலத்தில், சம்பாவில் இந்து சமயம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சைவமும், வைணவமும் தழைத்தோங்கின. புத்த சமயமும் வளர்ச்சியடைந்தது. இந்து தத்துவம், இலக்கணம், நுண்கலைகள், ஜோதிடம் குறித்த பல்வேறு நூல்கள் எழுதப்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல் , இந்து, வரலாறு, இந்திய, பண்பாடு, இரண்டாம், அங்கு, கல்வெட்டுகள், எண்ணற்ற, ஆசிய, வாட், நூற்றாண்டில், இந்தியப், பரவுதல், அங்கார், சம்பா, நாடுகளில், கோயில், அரசு, சம்பாவில், காணப்படுகின்றன, வர்மன், தழைத்தோங்கின, என்றும், அரசகுலம், இந்தியா, அல்லது, வைணவமும், இலக்கணம், வடமொழிக், சைவமும், கம்போடிய