ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்
ஏழாம் நூற்றாண்டிலிருந்து திபெத்துடன் இந்தியா பண்பாட்டு உறவு கொண்டது. காம்போ என்ற புத்தசமய அரசர் லாசா நகரை நிறுவி அங்கு புத்த சமயத்தை அறிமுகப்படுத்தினார். இந்திய அறிஞர்களின் துணையோடு திபெத்திய எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், திபெத்தில் லாமாக் கோட்பாடு நிறுவப்படுவதற்கும் இந்திய அறிஞர்கள் உதவினர். பதினோராம் நூற்றாண்டில் வங்காள ஆட்சியாளர்களான பாலர்கள் திபெத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். வங்காளம் முஸ்லிம் படையெடுப்புக்கு ஆளானபோது, பல புத்த சமயத் துறவிகள் திபெத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இந்தியாவும் இலங்கையும்
சிகிரியா ஓவியங்கள் |
தென்கிழக்காசியாவில் இந்தியப் பண்பாடு
இந்தோ-சீனா, மலேயா உள்ளடக்கிய தென்கிழக்காசிய பகுதியில் இந்தியப் பண்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவிற்கு அப்பால் இவை அமைந்துள்ளன. நிலவளமும் கனிவளமும், நிறைந்த இப்பகுதி இந்தியர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் எண்ணற்ற துறைமுகங்கள் அமைந்திருந்தன. எனவே, இந்தியர்கள் இந்நிலப்பகுதிகளுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டனர். தங்கபூமி என்ற பொருள்படும் சுவர்ணபூமிக்கு வணிகர்கள் பயணம் மேற்கொண்டதாக இந்திய பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. சுவர்ணபூமி என்ற சொல் பொதுவாக கீழைநாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் கிழக்காசியாவில் இந்தியர்கள் குடியேறத் தொடங்கினர். பல்லவர்கள் காலத்தில் அது மேலும் ஊக்கம் பெற்றது. இந்தியக் குடியேறிகள் அங்கு பெரும் அரசுகளையும் உருவாக்கினர். அவற்றில் ஒருசில அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தின. பல பகுதிகளில் இந்தியப் பெயர்களையுடைய அரச குலங்கள் ஆட்சி புரிந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்லாம் வருகை தந்த காலம் வரை இந்தியப் பண்பாடு இப்பகுதியில் கோலோச்சியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல் , இந்தியப், இந்திய, வரலாறு, பண்பாடு, அங்கு, புத்த, ஆசிய, நூற்றாண்டில், இந்தியா, நாடுகளில், பரவுதல், மேலும், பெரும், ஆட்சி, இந்தியர்கள், இலங்கைக்கு, காலத்தில், உறவு, இந்தியாவும், இந்தியாவின், திபெத்துடன், திபெத்தில், வங்காள, சிகிரியா