பேரரசுச் சோழர்கள்
சோழப் பேரரசு மண்டலங்களாகவும் மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு, பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு என்ற பகுதியில் பல தன்னாட்சி பெற்ற கிராமங்கள் இருந்தன. மண்டலங்களின் நிர்வாகத்தை அரச குலத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் கவனித்து வந்தனர். வளநாட்டை பெரிய நாட்டாரும், நாடு பகுதியை நாட்டாரும் நிர்வகித்தனர். நகர நிர்வாகத்தை நகரத்தார் என்ற அவை மேற்கொண்டது.
கிராம சபைகள்
சபைகளும், சபைக்குழுக்களும் கொண்ட கிராம தன்னாட்சிமுறை காலங்காலமாக தமிழ்நாட்டில் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. சோழர் ஆட்சிக் காலத்தில் அது ஏற்றம் பெற்று விளங்கியது. முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் கிராம சபைகளின் நடவடிக்கைகள் பற்றி விவரிக்கின்றன. அந்த கிராமம் முப்பது குடும்பு அல்லது வார்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வார்டிலிருந்தும் கிராம சபைக்கான பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். கிராம சபை உறுப்பினராவதற்கான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவையாவன:
அ. குறைந்தபட்சம் கால்வேலி நிலமாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஆ. சொந்த இல்லத்தில் குடியிருக்க வேண்டும்.
இ. முப்பது வயதுக்கு மேலும் எழுபது வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்.
ஈ. வேதங்கள் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும், யார் யார் தகுதியற்றவர்கள் என்பது அக்கல் வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை:
அ. கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கிராம சபையில் உறுப்பினராக பணியாற்றியவர்கள்.
ஆ. கிராம சபைக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றி சரிவர கணக்குகளை அளிக்காதவர்கள்.
இ. பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள்
ஈ. பிறர் பொருட்களை களவாடியவர்கள்.
சோழர்கால கல்வெட்டு |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரரசுச் சோழர்கள் , கிராம, வரலாறு, வாரியம், இந்திய, முப்பது, வேண்டும், தெரிவு, அல்லது, சோழர்கள், பேரரசுச், இவ்வாறு, எண்ணிக்கையும், யார், பெற்று, நிர்வாகத்தை, நாடு, இந்தியா, நாட்டாரும், கொண்ட, அந்த, ஆட்சிக், கிராமம்