பேரரசுச் சோழர்கள்
மத்திய அரசாங்கம்
சோழர்கள் சிறந்த ஆட்சிமுறையைப் பெற்றிருந்தனர். ஆட்சிக்கு பேரரசர் தலைமை வகித்தார். சோழப் பேரரசின் பரப்பும், செல்வமும் அவரது அதிகாரத்தையும், மதிப்பையும் உயர்த்தின. தஞ்சை, கங்கை கொண்டசோழபுரம் போன்ற பெரிய தலைநகரங்களும், பிரமாண்டமான அரசவைகளும், ஆலயங்களுக்கு அள்ளி வழங்கிய நிலக் கொடைகளும் சோழ அரசனின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன. ஆட்சியின் வல்லமையை உணர்த்துவதற்காக சோழ அரசர்கள் அவ்வப்போது அரசப் பயணங்களை மேற்கொண்டனர். பெருந்தனம், சிறுதனம் என்று அழைக்கப்பட்ட அதிகார வர்க்கம் ஆட்சிக்குப் பொறுப்பு வகித்தன.
வருவாய் நிர்வாகம்
சோழர்கால நில வருவாய்த்துறை நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. அது புரவுவரித்திணைக்களம் என்று அழைக்கப்பட்டது. அனைத்து நிலங்களும் முறையாக அளக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. கிராம குடியிருப்பு பகுதிகள் ஊர் நத்தம் எனப்பட்டது. இப்பகுதியும், ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலப்பகுதியும் வரிவிலக்கு பெற்றிருந்தன. நில வரியைத்தவிர ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான சுங்கமும் வசூலிக்கப்பட்டது. பல்வேறு தொழில்களுக்கும் வரிவிதிக்கப்பட்டன. திருமணம், சடங்குகள் போன்ற நிகழ்வுகளின் போதும் வரி வசூலிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்களும் மற்றொரு வருவாயாகும். இடர்மிக்க காலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கன் வரிவிலக்கு அளித்தான் என்பதற்காக சுங்கம் தவிர்த்த சோழன் என்ற விருதுப் பெயரைச் சூட்டிக்கொண்டான். அரசன், அரசவை, ராணுவம், கப்பற்படை, சாலை பராமரிப்பு, நீர்ப்பாசன ஏரிகள், கால்வாய்கள் அமைத்தல் போன்றவை அரசின் செலவினங்களாக இருந்தன.
ராணுவ நிர்வாகம்
சோழர் கொடி |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரரசுச் சோழர்கள் , சோழர்கள், வரலாறு, இந்திய, பேரரசுச், வசூலிக்கப்பட்டது, அளிக்கப்பட்டது, ராணுவ, மற்றொரு, இருந்தன, கப்பற்படை, நிர்வாகம், சோழர், இந்தியா, பெற்றிருந்தனர், ஆலயங்களுக்கு, அழைக்கப்பட்டது, வரிவிலக்கு