பேரரசுச் சோழர்கள்
பேரரசுச் சோழ மரபைத் தோற்றுவித்தவர் விஜயாலய சோழன். கி.பி. 815 ஆம் ஆண்டு அவர் முத்தரையரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினார். அங்கு துர்கை கோயிலையும் கட்டுவித்தார். அவரது புதல்வரான ஆதித்ய சோழன் அபராஜித பல்லவனை முறியடித்து பல்லவர் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தொண்டைமண்டலத்தையும் சோழப் பேரரசோடு இணைத்துக் கொண்டார். முதலாம் பராந்தக சோழன் முற்காலச் சோழ அரசர்களில் குறிப்பிடத்தக்கவர். பாண்டியர்களையும் இலங்கை ஆட்சியாளரையும் அவர் முறியடித்தார். ஆனால், புகழ்மிக்க தக்கோலப் போரில் இராஷ்டிரகூடர்களிடம் அவர் தோல்வியைத் தழுவினார். முதலாம் பராந்தகன் பல கோயில்களையும் கட்டுவித்தான். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன் முதலாம் பராந்தகன், அவரது காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் இரண்டு சோழர் காலத்தில் நிலவிய கிராம ஆட்சிமுறை பற்றி விளக்கங்களைக் கூறுகிறது. முப்பதாண்டு கால இடைவெளிக்குப் பிறகு முதலாம் ராஜராஜன் காலத்தில் மீண்டும் சோழர்கள் புகழடைந்தனர்.
முதலாம் ராஜராஜன் (கி.பி. 985 - 1014)
ராஜராஜன் I |
1 . காந்தளுர் சாலை என்ற இடத்தில் சேர மன்னன் பாஸ்கரரவிவர்மனுடைய கடற்படைகளை முறியடித்தான்.
2. பாண்டிய அரசன் அமரபுஜங்கன் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
3. மைசூர்ப் பகுதியிலிருந்த கங்கவாடி, நுளம்பபாடி, தடிகைபாடி போன்ற பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
4. இலங்கைப் படையெடுப்பை அவரது புதல்வன் முதலாம் ராஜேந்திரன் மேற்கொண்டான். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் நாட்டைவிட்டு ஓடினான். வடக்கு இலங்கையை சோழர்கள் இணைத்துக் கொண்டனர். தலைநகர் அனுராதபுரத்திலிருந்து பொலநருவா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு சிவாலயம் ஒன்றும் எழுப்பப்பட்டது.
5. எழுச்சி பெற்றுவந்த கல்யாணிச் சாளுக்கியரை முதலாம் ராஐ ராஜன் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார். சாளுக்கிய அரசன் சத்யஸ்ரீயன் முறியடிக்கப்பட்டான். முதலாம் ராஜராஜன் ரெய்ச்சூர் தோஆப், பனவாசி போன்ற இடங்களைக் கைப்பற்றினார். சோழப் பேரரசு துங்கபத்திரா நதிக்கரை வரை பரவியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரரசுச் சோழர்கள் , முதலாம், சோழர்கள், வரலாறு, ராஜராஜன், பேரரசுச், அவரது, இந்திய, சோழப், அவர், சோழன், சோழர், அரசன், காலத்தில், ராஜேந்திரன், பாண்டிய, பேரரசு, பராந்தகன், புதல்வன், அங்கு, பிறகு, இந்தியா, மீண்டும், ஆட்சிமுறை, இணைத்துக், கைப்பற்றினார், இலங்கை