சாளுக்கியர்கள்
சாளுக்கியர்கள் (கி.பி. 543 - 755)
சுமார் இரண்டு நூற்றாண்டுகள் தக்காணத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்கள் சாளுக்கியர்கள். பின்னர் இராஷ்டிரகூடர்களின் வலிமை பெருகியது. மேலைச் சாளுக்கியரின் வழிவந்தவர்கள் வெங்கியின் கீழைச் சாளுக்கியர்களும் கல்யாணிச் சாளுக்கியர்களும் ஆவார்கள். மேலைச்சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் முதலாம் புலிகேசி. வாதாபி அல்லது தற்காலத்திய பாதாமியை தலைநகராகக் கொண்டு அவர் ஒரு சிறிய அரசை தோற்றுவித்தார்.
இரண்டாம் புலிகேசி (கி.பி. 608 - 642)
சாளுக்கிய நாணயங்கள் |
இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் விக்ரமாதித்தன். அவர் சாளுக்கிய நாட்டை மீண்டும் நிலைப்படுத்தி பல்லவர்களை முறியடித்ததோடு காஞ்சியையும் கைப்பற்றினார். பல்லவர்களிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்கு விக்ரமாதித்தன் பழிதீர்த்துக் கொண்டார், சாளுக்கிய மரபின் கடைசி அரசர் இரண்டாம் கீர்த்திவர்மன். அவனை முறியடித்து இராஷ்டிரகூட அரசை நிறுவியவன் தந்தி துர்க்கன்.
சாளுக்கியரின்கீழ் ஆட்சி முறை, சமூக வாழ்க்கை
பல்லவர்கள், சோழர்கள் ஆட்சி முறைக்கு மாறாக சாளுக்கிய ஆட்சிமுறையில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டே இருந்தது. சாளுக்கியரின்கீழ் கிராம சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சாளுக்கியர்கள் சிறந்த கடற்படையைக் கொண்டிருந்தனர். இரண்டாம் புலிகேசியின் கடற்படையில் நூறு கப்பல்கள் இருந்தன. மேலும் நிரந்தரமான சிறு படையையும் அவர்கள் வைத்திருந்தனர்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாளுக்கியர்கள் , இரண்டாம், சாளுக்கியர்கள், சாளுக்கிய, வரலாறு, இந்திய, தனது, அவர், புலிகேசி, ஆட்சி, புலிகேசியின், மரபின், ஆட்சிக், சாளுக்கியரின்கீழ், விக்ரமாதித்தன், அரசர், அரசை, அவரது, முதலாம், மேலைச், பல்லவர்கள், இந்தியா, சிறு, அரசியல், இரண்டு, சாளுக்கியர்களும், பின்னர், மேலும், வாதாபி