முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்திய வரலாறு » வரலாற்றுக்கு முந்தைய இந்தியா » வேதக் காலப் பண்பாடு » ரிக்வேத காலம் (அ) முன்தைய வேத காலம்
ரிக்வேத காலம் (அ) முன்தைய வேத காலம் (Rig Vedic Age or Early Vedic Period)
ரிக்வேத கால அரசியல்
குலம் அல்லது குடும்பம் என்பதே ரிக் வேதகால அரசியலுக்கு அடிப்படையாக இருந்தது, பல குடும்பங்கள் இணைந்து கிராமம் உருவாயிற்று. கிராமத்தின் தலைவர் கிராமணி எனப்பட்டார். பல கிராமங்கள் இணைந்து விசு என்ற அமைப்பு தோன்றியது. இதன் தலைவர் 'விஷயபதி. மிகப்பெரிய அரசியல் ஒருங்கிணைப்பு 'ஜன' எனப்பட்டது. ரிக்வேத காலத்தில் பரதர்கள், மத்ச்யர்கள், யதுக்கள், புருக்கள் போன்ற பல்வேறு அரச குலங்கள் இருந்தன. அரசின் தலைவன் ராஜன். ரிக்வேத காலத்தில் பெரும்பாலும் முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. பரம்பரை வாரிசு முறையே பின்பற்றப்பட்டது. நிர்வாகத்தில் அரசனுக்கு உதவியாக புரோகிதரும், சேனானி என்ற படைத்தளபதியும் இருந்தனர். சபா, சமிதி என்ற இரண்டு புகழ்வாய்ந்த அவைகளும் இருந்தன. சபா என்பது ஊர்ப்பெரியோர் அடங்கிய அவையாகவும், சமிதி என்பது பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகவும் விளங்கின.
சமூக வாழ்க்கை
ரிக்வேத காலம் |
பருத்தி மற்றும் கம்பளியாலான ஆடைகளை ஆண் பெண் இருபாலரும் அணிந்தனர். இருபாலரும் பல்வேறு வகையிலான ஆபரணங்களை அணிந்தனர். கோதுமை, பார்லி, பால், தயிர், நெய், காய்கறிகள், கனிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாகும். பசு புனித விலங்காக கருதப்பட்டதால் பசு இறைச்சி உண்பதற்கு தடையிருந்தது. தேரோட்டப் போட்டி, குதிரையோட்டம், சதுரங்கம், இசை, நடனம் போன்றவை அவர்களது இனிய பொழுதுபோக்குகள். பிந்திய வேத காலத்தில் இருந்ததைப்போல ரிக்வேதகால சமூகத்தில் பிரிவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கவில்லை.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரிக்வேத காலம் (அ) முன்தைய வேத காலம் (Rig Vedic Age or Early Vedic Period), ரிக்வேத, காலம், காலத்தில், வரலாறு, ரிக், இந்திய, என்பது, முன்தைய, அல்லது, அரசியல், தலைவர், அவையாகவும், வழக்கிலிருந்தது, முறையே, சமிதி, பங்கெடுத்துக், அணிந்தனர், போன்றவை, இருபாலரும், பெண், முக்கிய, இருந்தன, பொது, வாழ்க்கை, வாழ்ந்தனர், சிந்து, பெரும்பாலும், vedic, இந்தியா, ரிக்வேதகால, மக்களின், இணைந்து, அடிப்படையாக, குடும்பம், சமூக, பல்வேறு