பாளையக்காரர் கிளர்ச்சி
1799ல் பாளையக்காரர்கள் கடுமையான வகையில் ஒடுக்கப்பட்ட போதிலும், 1800ல் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இச்சமயம், கிளர்ச்சி ஒன்றுபட்டதாகவும் இருந்தது. 1800 - 1801 ஆண்டு கிளர்ச்சி இரண்டாவது பாளையக்காரர் போர் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிக்கப்பட்டிருந்தாலும், கிளர்ச்சியின் தன்மை முன்னதைவிட மேலும் பெரிதாகவே இருந்தது. சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டியர், திண்டுக்கல் கோபால நாயக்கர், மலபாரின் கேரளவர்மா, மைசூரின் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் துண்டாஜி ஆகியோர் அடங்கிய ஒரு பெரும் கூட்டிணைவு இக்கிளர்ச்சியை முன்னின்று நடத்தியது.
மருது சகோதரர்கள் |
எஞ்சியிருந்த கலகக்காரர்களையும் பிரிட்டிஷ் படைகள் முறியடித்தன. மருது சகோதரர்களும் அவர்களின் புதல்வர்களும் கொல்லப்பட்டனர். 1801 நவம்பர் 16 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை, செவத்தையா ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஆங்கிலேயர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான அழிவு வேலைகளால் அப்பகுதி முழுவதுமே படுபயங்கரமாக காட்சியளித்தது.
1799 மற்றும் 1800 - 1801 ஆண்டுகளில் நடைபெற்ற பாளையக்காரர் கிளர்ச்சிகளை ஒடுக்கியதன் மூலம் குறுநிலத்தலைவர்கள் அறவே ஒழிக்கப்பட்டனர். 1801 ஜூலை 31ல் கையெழுத்திடப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி, தமிழ்நாடு முழுவதையும் பிரிட்டிஷார் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பாளையக்காரர் முறை முடிவை சந்தித்தது. வணிகக்குழு அந்த இடங்களில் ஐமீன்தாரி முறையை அறிமுகப்படுத்தியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாளையக்காரர் கிளர்ச்சி , வரலாறு, பாளையக்காரர், கிளர்ச்சி, மருது, மீண்டும், இந்திய, பிரிட்டிஷ், அந்த, கோட்டை, படைகள், பாஞ்சாலங்குறிச்சி, ஆகியோர், சகோதரர்கள், நாயக்கர், இந்தியா, ஊமைத்துரை