பாளையக்காரர் கிளர்ச்சி
தனது தந்தை ஜெகவீர பாண்டியனின் மறைவுக்குப்பிறகு, முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார். வணிகக் குழுவின் அதிகாரிகளான ஜேம்ஸ் லண்டன், கோலின் ஜாக்சன் ஆகியோர் அவரை படிப்பறிவில்லாதவராக இருந்தாலும் அமைதியானவர் என்றே கருதினர். இருப்பினும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால் கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கும் சச்சரவுகள் தோன்றின. கப்பம் கட்டுவது சச்சரவுக்கு முக்கிய காரணமாயிற்று. 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கைப்படி ஆற்காடு நவாப் இந்த உரிமையை ஆங்கிலேயருக்கு கொடுத்திருந்தார். எனவே பாஞ்சாலங்குறிஞ்சி பாளையக்காரரான கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது. 1798ல் கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பம் நிலுவையிலிருந்தது.
கட்டபொம்மன் |
கலெக்டர் ஜாக்சன் தனக்கேயுரிய அகந்தையுடனும் முரட்டுத்தனத்துடனும் கட்டபொம்மனுக்கு மிரட்டல் கடிதங்களை அனுப்பினார். "வானம் பொழிகிறது பூமி விளைகிறது எதற்காக நாங்கள் ஆங்கிலேயருக்கு வரி கட்டவேண்டும்" என்று கட்டபொம்மன் கூறியதாக வழக்காறு உள்ளது. 1798 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பத்தொகை நிலுவை 3310 பகோடாக்களாகும். (பகோடா என்பது ரூபாய்). ஜாக்சன் தனது படையை கட்டபொம்மனுக்கு எதிராக அனுப்ப விரும்பினார். ஆனால் சென்னை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
1798 ஆகஸ்ட் 18ம் நாள் தம்மை ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணையனுப்பினார். இதற்கிடையில் ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் திருக்குற்றாலத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இருமுறை முயற்சித்தார். ஆனால், அவமதிப்பே மிஞ்சியது. ராமநாதபுரத்தில்தான் கலெக்டரை சந்திக்கமுடியும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், கட்டபொம்மன் ஜாக்சனைத் தொடர்ந்து அவர் சென்ற பாதையிலேயே 466 மைல்கள் சென்று செப்டம்பர் 13ஆம் நாள் ராமநாதபுரத்தை அடைந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாளையக்காரர் கிளர்ச்சி , கட்டபொம்மன், வரலாறு, இந்திய, பாளையக்காரர், ஜாக்சன், கப்பம், கட்டபொம்மனுக்கு, கிளர்ச்சி, நாள், ஆங்கிலேயருக்கு, கட்டவேண்டிய, தனது, இந்தியா, வீரபாண்டிய, இருப்பினும்