பாளையக்காரர் கிளர்ச்சி
தனது ராஜதந்திர முயற்சிகள் மூலம் பூலித்தேவரின் மனதை மாற்ற கர்னல் ஹெரான் முயற்சித்தார். படைபலத்தைக் காட்டி மிரட்டினார். அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேற்கிலிருந்த மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை பூலித்தேவர் மேலும் வலிமைப்படுத்திக் கொண்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார். பிரிட்டிஷார் ராமநாதபுரம், புதுக்கோட்டை அரசுகளிடமும் டச்சுக்காரர்களிடமும் ஆதரவு கோரினார். ஹைதர் அலி ஏற்கனவே மராட்டியருடன் மோதலில் ஈடுபட்டிருந்தமையால் பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை. பூலித்தேவரையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை பிரிட்டிஷார் யூசுப் கானிடம் (கான்சாகிப்) ஒப்படைத்தனர்.
பூலித்தேவர் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். புலித்தேவரின் இந்த ராணுவ வெற்றி மகத்தானதாகும். ஒரு இந்திய வீரர் பிரிட்டிஷாருக்கு எதிராக நின்று வெற்றி கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் அது வெளிப்படுத்தியது. ஆனால் மறுபடியும் மாபஸ்கான் மதுரையை மீட்டார். கிழக்கத்திய பாளையக்காரர்கள் மற்றும் திருவாங்கூர் அரசரின் உதவியோடு யூசுப்கான் பல வெற்றிகளைப் பெற்றார். கடுமையான போருக்குப்பிறகு 1759ல் நெல்கட்டும் செவல் மீது தாக்குதல் தொடர்ந்தது. 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது. பூலித்தேவர் அங்கிருந்து தப்பியோடினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறாமலேயே அவர் இறந்தார். அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்த போதிலும், தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கிய பெருமைக்குரியவராகிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாளையக்காரர் கிளர்ச்சி , வரலாறு, இந்திய, கர்னல், ஹெரான், அவரது, பூலித்தேவர், பாளையக்காரர், தனது, கிளர்ச்சி, முயற்சிகள், பிரிட்டிஷாருக்கு, எதிராக, கொண்டார், வெற்றி, பிரிட்டிஷார், ஹைதர், உதவியோடு, இந்தியா, பாளையக்காரர்களும், மாபஸ்கான், பிரிட்டிஷ், மறவர்