முகலாயப் பேரரசு
சமயக் கொள்கை
வரலாற்றின் ஏடுகளில் அக்பர் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதற்கு காரணம் அவரது சமயக்கொள்கையேயாகும். அக்பரின் சமயக் கருத்துக்களுக்கு பல்வேறு காரணிகள் துணைபுரிந்தன. தொடக்க காலத்தில் அவர் சூஃபித் துறவிகளுடன் கொண்டிருந்த உறவுகள் அவரது ஆசான் அப்துல் லத்தீபின் போதனைகள், ராஜபுத்திரப் பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டது, ஷேக் முபாரக் மற்றும் அவரது புதல்வர்களான அபுல் பெய்சி, அபுல் பசல் போன்ற அறிஞர்களுடன் அவரது தொடர்புகள், இந்துஸ்தானத்தில ஒரு பேரரசை நிறுவ வேண்டும் என்ற ஆசை போன்றவை அவரது சமய கருத்துக்களுக்கு அடிப்படையாக அமைந்தன.
பதேபூர் சிக்ரி |
1575ல், அக்பர் தனது புதிய தலைநகரான பதேபூர் சிக்ரியில் இபாதத் கானா என்ற வழிபாட்டுக் கூடத்தை அமைத்தார். இந்து சமயம், சமண சமயம், கிறித்துவ சமயம், ஸெளராஸ்டிரிய சமயம் போன்ற அனைத்து சமய அறிஞர்களையும் அங்கு அழைத்து விவாதிக்க செய்தார். அரசியல் விவகாரங்களில் முஸ்லிம் உலேமாக்கள் தலையிடுவதையும் அவர் வெறுத்தார். 1579ல் அக்பர் "தவறுபடா ஆணையை" வெளியிட்டு தமது சமய அதிகாரங்களை உறுதிப்படுத்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , வரலாறு, அவரது, அவர், முகலாயப், அக்பர், சமயம், பேரரசு, இந்திய, செய்தார், ரத்து, சமயக், கொள்கை, கருத்துக்களுக்கு, அபுல், இந்து, பதேபூர், தனது, வரியையும், ராஜபுத்திரக், இந்தியா, பின்னர், ஜிசியா, அக்பரின், ராஜபுத்திரர்கள்