முகலாயப் பேரரசு
அக்பரது ராணுவ வெற்றிகள் பல. ஆக்ரா முதல் குஜராத் வரையும், பின்னர் ஆக்ரா முதல் வங்காளம் வரையும் என வட இந்தியா முழுவதையும் அக்பர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். வடமேற்கு எல்லைப் புறத்தையும் அவர் வலிமைப்படுத்தினார். பின்னர் அவரது கவனம் தக்காணத்தின் பக்கமும் திரும்பியது.
ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த உறவுகள்
அக்பரின் ராஜபுத்திரக்கொள்கை குறிப்பிடத்தக்கது. அவர் ராஜபுத்திர இளவரசியான ராஜா பாரமஹாலின் மகளை மணந்து கொண்டார். முகலாயர் வரலாற்றில் அந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாகும். ராஜபுத்திரர்கள் நான்கு தலைமுறைகள் முகலாயர்களுக்கு சேவையாற்றினர். பலர் படைத்தளபதி பதவி வரை பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்றனர். அக்பரது ஆட்சியில், ராஜா பகவான்தாஸ், ராஜா மன்சிங் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டன. ஒருவர்பின் ஒருவராக ராஜபுத்திர அரசுகளும் அக்பரின் மேலாண்மைபை ஏற்றுக் கொண்டன.
ஆனால், மேவாரின் ராணாக்கள் மட்டும், பலமுறை தோல்விகளைத் தழுவிய போதிலும் அடிபணிய மறுத்தனர். 1576 ஆம் ஆண்டு ஹால்திகாட் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மன்சிங் தலைமைரிலான முகலாயப் படைகள் ராணா பிரதாப் சிங்கை முறியடித்தன. மேவாரின் இத்தோல்விக்குப் பிறகு, பெரும்பாலான ராஜபுத்திர ஆட்சியாளர்கள் அக்பரின் மேலாண்மைக்கு அடிபணிந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , வரலாறு, முகலாயப், அக்பரின், இந்திய, பேரரசு, ராஜா, அவர், இந்தியா, ராஜபுத்திர, பதவி, மன்சிங், மேவாரின், அக்பரது, அக்பர், ஆக்ரா, வரையும், பின்னர்