முகலாயப் பேரரசு
1540 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஹூமாயூன் சிந்துவுக்கு செல்லும் வழியில் ஹமீதா பானு பேகம் என்பவரை மணந்தார். அவர்கள் அமர்கோட் என்ற இடத்தில் ஒரு இந்து அரசரான ராணாபிரசாத் என்பவரது ஆதரவில் வாழ்ந்து வந்தபோது 1542ல் அக்பர் பிறந்தார். பின்னர், ஈரானுக்கு சென்ற ஹூமாயூன் அந்நாட்டு ஆட்சியாளரிடம் உதவிகோரி பெற்றார். கம்ரான், அஸ்காரி என்ற இரண்டு சகோதரர்களையும் ஹூமாயூன் முறியடித்தார். இதற்கிடையில் இந்தியாவில் சூர் மரபினரின் ஆட்சியும் வேகமாக சீர்குலைந்தது.
1555 ஆம் ஆண்டு ஆப்கன்களை முறியடித்து ஹூமாயூன் மீண்டும் முகலாய அரியணையைக் கைப்பற்றினார். ஆறுமாத காலத்திற்குப் பிறகு 1556ல் ஹூமாயூன் தனது நூலகப்படிக்கட்டில் தடுக்கி விழுந்து உயிர்நீத்தார். ஹூமாயூன் ஒரு சிறந்த படைத்தளபதியாகவோ, போர் வீரராகவோ இல்லையென்றாலும், அன்பும் கருணையும் அவரிடம் குடிகொண்டிருந்தன. கல்விமானாகவும் அவர் திகழ்ந்தார். கணிதம், வான இயல், ஜோதிடம் ஆகியவற்றில் புலமை மிக்கவர். ஓவியக்கலை அவருக்குப்பிடித்த ஒன்று. பாரசீக மொழியில் அவர் கவிதைகளையும் புனைந்தார். '
அக்பர் |
இந்தியாவின் தலைசிறந்த பேரரசர்களில் அக்பரும் ஒருவர். தனது தந்தை ஹூமாயூனின் மறைவுக்குப்பிறகு அவர் அரியணையேறினார். ஆனாலும், டெல்லியை ஆப்கன்கள் கைப்பற்றிக் கொண்டதால் அவரது நிலை ஆபத்தானதாகவே இருந்தது. ஆப்கன்களின் படைத்தலைவர் ஹெமு டெல்லியைத்தம் வசம் வைத்திருந்தார். 1556 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் பானிப்பட்டுப் போரில், ஹெமு வெற்றியின் விளிம்புவரை சென்றுவிட்டார். ஆனால் அவரது கண்ணில் ஓர் அம்பு பாய்ந்ததால் மயக்கமானார். தலைவனில்லாத அவரது படை சிதறி ஓடியது. அதிர்ஷ்டம் அக்பரின் பக்கம் இருந்ததால், அவரது வெற்றி உறுதிப் படுத்தப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , ஹூமாயூன், வரலாறு, இந்திய, அவரது, அக்பர், அவர், ஆண்டு, முகலாயப், பேரரசு, ஹெமு, இந்தியாவின், இந்தியா, தனது