முகலாயப் பேரரசு
1. சோனார்கான் முதல் சிந்து வரை
2. ஆக்ரா முதல் புர்ஹாம்பூர் வரை
3. ஜோத்பூர் முதல் சித்தூர் வரை
4. லாகூர் முதல் முல்தான் வரை.
பயணிகளின் வசதிக்காக பெருவழிச் சாலைகளில் ஆங்காங்கே தங்குமிடங்களும் அமைக்கப்பட்டன.
காவல்துறை மிகவும் திறமையாக சீரமைக்கப்பட்டிருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன.
படைத்துறை நிர்வாகமும் திறமையான முறையில் அமைக்கப் பட்டிருந்தது. அலாவுதின் கில்ஜியின் குதிரைகளுக்கு சூடுபோடுதல் போன்ற நடைமுறைகளை ஷெர்ஷா பின்பற்றினார்.
ஷெர்ஷா பற்றிய ஒரு மதிப்பீடு
ஷெர்ஷா ஒரு பண்புமிக்க முஸ்லிமாகத்திகழ்ந்தார். பொதுவக, பிற சமயப்பிரிவுகளை சகிப்புத்தன்மையுடன் நடத்தினார். இந்துக்களுக்கு முக்கிய பதவிகளை அளித்தார். கலை, கட்டிடக்கலையையும் அவர் ஆதரித்தார். டெல்லிக்கு அருகில் யமுனை நதிக்கரையில் ஷெர்ஷா ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்தார். அதில் தற்போது புராண கிலா என்ற பழைய கோட்டையும் அதனுள் ஒரு மசூதியும் மட்டுமே எஞ்சியுள்ளன. சசாரத்தில் ஒரு கல்லறை மாடத்தையும் அவர் கட்டினார். இந்தியக் கட்டிடக் கலையின் அமைப்புகளில் சிறந்தவற்றில் ஒன்றாக அது கருதப்படுகிறது. கற்றோரையும் ஷெர்ஷா ஆதரித்தார். அவரது ஆட்சிக்காலத்தில் மாலிக் முகமது ஜெயசி என்பவர் புகழ்வாய்ந்த இந்தி நூலான பத்மாவத் என்ற நூலைப்படைத்தார்.
ஷெர்ஷாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுகள் 1555ஆம் ஆண்டு ஹூமாயூன் மீண்டும் இந்தியாவைக் கைப்பற்றும் வரை ஆட்சியில் தொடர்ந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , ஷெர்ஷா, வரலாறு, இந்திய, முகலாயப், அவரது, பேரரசு, ஆதரித்தார், அவர், முக்கிய, இந்தியா, பெருவழிச், மிகவும்