முகலாயப் பேரரசு
ஷெர்ஷா, ராஜபுத்திரர்களுடன் பலமுறை போரிட்டு தனது பேரரசை விரிவுபடுத்திக் கொண்டார். பஞ்சாப், மாளவம், சிந்து, முல்தான், பண்டேல்கண்ட் பேன்றவை அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அடங்கும். அஸ்ஸாம், நேபாளம், காஷ்மீர், குஜராத் தவிர ஏனைய வட இந்தியா முழுவதையும் கொண்டதாக ஷெர்ஷாவின் பேரரசு விளங்கியது.
ஷெர்ஷாவின் ஆட்சி முறை
ஷெர்ஷா சூர் |
1 . திவானி விசாரத் - வாசிர் என்றும் இவர் அழைக்கப்பட்டார். வருவாய் மற்றும் நிதிநிர்வாகம்
2. திவானி அரிஸ் - படைத்துறை
3 திவானி ரவலத் - அயலுறவுத்துறை
4. திவானி இன்ஷா - தகவல் தொடர்புத்துறை
ஷெர்ஷாவின் பேரரசு நாற்பத்தியேழு சர்க்கார்களாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சர்க்காரிலும் முதன்மை ஷிக்தார் (சட்டம் ஓழுங்கு), முதன்மை முன்சீப் (நீதி வழங்குதல்) என்ற இரண்டு முக்கிய அதிகாரிகள் இருந்தனர். ஒவ்வொரு சர்க்காரும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஷிக்தார் (ராணுவ அதிகாரி), அமின் (நிலவருவாய்), பொடேதார் (கருவூல அதிகாரி), கர்கூன்கள் (கணக்கர்கள்) ஆகிய அதிகாரிகள் பர்கானா நிர்வாகத்தை கவனித்து வந்தனர். பேரரசில் இக்தா என்றழைக்கப்பட்ட நிர்வாகப்பிரிவுகளும் இருந்தன.
ஷெர்ஷாவின் ஆட்சிக்காலத்தில் நிலவருவாய் நிர்வாகம் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. நிலங்கள் கவனமாக அளக்கப்பட்டன.
விளைநிலங்கள் அனைத்தும் நல்லவை, நடுத்தரமானவை மோசமானவை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. சாதாரணமாக சாராசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. பணமாகவோ அல்லது விளை பொருளாகவோ நிலவரி பெறப்பட்டது. ஷெர்ஷாவின் நிலவருவாய் சீர்த்திருத்தங்களினால் நாட்டின் வருவாய் பெருகியது. 'தாம்' என்ற புதிய வெள்ளி நாணயங்களை ஷெர்ஷா அறிமுகப்படுத்தினார். அவை 1835ஆம் ஆண்டு வரைகூட புழக்கத்திலிருந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , வரலாறு, ஷெர்ஷா, பேரரசு, ஷெர்ஷாவின், திவானி, இந்திய, முகலாயப், நிலவருவாய், இந்தியா, ஷிக்தார், முதன்மை, அதிகாரிகள், ஒவ்வொரு, அதிகாரி, முக்கிய, சூர், இருந்தன, இருந்தனர், வருவாய், பிரிக்கப்பட்டிருந்தன