முகலாயரின் கீழ் இந்தியா
அக்பர்- ஆக்ராவிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பதேபூர் சிக்ரி (வெற்றி நகரம்) என்ற இடத்தில் அரண்மனைக் கோட்டை ஓன்றை எழுப்பினார். அந்த வளாகத்தில் குஜராத்தி மற்றும் வங்காளப் பாணியிலான பல கட்டிடங்கள் அமைந்துள்ளன. குஜராத்தி பாணிக் கட்டிடங்களை அக்பர் அவரது ரஐபுத்திர மனைவியருக்காக அமைத்திருக்கக் கூடும். அங்குள்ள ஜிம்மா மசூதி மிகவும் பிரம்மாண்டமான கட்டிடமாகும்.
பாஞ்ச மகால் |
பதேபூர் சிக்ரியில் உள்ள ஜோத்பாய் அரண்மனை ஐந்து அடுக்குகள் கொண்ட பாஞ்ச் மகால் போன்றவையும் முக்கிய கட்டிடங்களாகும்.
டெல்லியிலுள்ள ஹூமாயூன் கல்லறை அக்பரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதன் குவிகை மாடம் பளிங்கினால் ஆனது. தாஜ்மகாலுக்கு முன்னோடியாக அதனைக் கருதலாம். ஆக்ராவுக்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் அக்பரின் கல்லறையை ஜஹாங்கீர் கட்டி முடித்தார். ஆக்ராவில் தனது தந்தை இதிமத் தௌலாவின் கல்லறையை நூர்ஜஹான கட்டியுள்ளார். வெள்ளைப் பளிங்குக் கற்களால் அது அமைக்கப்பட்டுள்ளது. அதன் சுவர்களில் விலை உயாந்த கற்கள்
தாஜ்மகால் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்தியா, இந்திய, அக்பர், அலங்கார, முகலாயரின், மகால், கீழ், அக்பரது, கல்லறையை, முக்கிய, நுழைவாயில், குஜராத்தி, தாஜ்மகால், பூவேலைப், காணப்படுகின்றன, காணலாம், இவ்வகை, அந்த, பதேபூர், டெல்லியிலுள்ள, காலத்தில், ஆட்சிக், அதில், கட்டிடங்கள், கோட்டை, அவரது, திவானி, ஷாஜகான்