முகலாயரின் கீழ் இந்தியா
காரியம், செம்பு போன்ற சில உலோகங்கள், போர்க் குதிரைகள், தந்தம் போன்ற ஆடம்பரப் பொருட்கள் போன்றவை முக்கிய இறக்குமதிப் பொருட்களாகும். தங்கம், வெள்ளி ஆகியவற்றை இறக்குமதி செய்ததன்மூலம் வணிகச் செலாவணி ஈடுகட்டப்பட்டது. அயல்நாட்டு வாணிகம் பெருகியதால், தங்கம், வெள்ளி இறக்குமதி பதினேழாம் நூற்றாண்டில் அதிகரித்து. அந்த நூற்றாண்டில் குஜராத்துக்கு வந்த டச்சு மற்றும் ஆங்கிலேய வணிகர்கள், இந்திய வணிகர்கள் சாமர்த்தியமாகவும் சுறுசுறுப்புடனும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
புராணகிலா |
முகலாயர் ஆட்கிக் காலத்தில் சிறப்பான, பரந்துபட்ட பண்பாட்டு நடவடிக்கைகளைக் காணமுடிகிறது. கலை, கட்டிடக் கலை, ஓவியம், இசை, இலக்கியம் போன்ற துறைகளில் அது நன்கு வெளிப்பட்டது. இத்தகைய பண்பாட்டு வளர்ச்சியில் இந்தியப் பாரம்பரியமும் முகலாயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட துருக்கி - ஈரானியப் பண்பாடும் ஒன்று கலந்தன.
கலை, கட்டிடக் கலை
திவானி காஸ் |
காஷ்மீரில் உள்ள நிஷத்பாக், லாகூரி உள்ள ஷாலிமார் பாக், பஞ்சாபிலுள்ள பங்சோர் தோட்டப் பூங்கா போன்றவை இன்றும்கூட நிலைத்திருக்கின்றன,
ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் பீகாரில் சசாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கல்லறை மாடமும், டெல்லிக்கு அருகிலுள்ள புராணகிலாவும் கட்டப்பட்டன. இடைக்கால இந்தியாவின் வியத்தகு கட்டிடங்களாக இவ்விரண்டு சின்னங்களும் கருதப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்திய, இந்தியா, கட்டிடக், போன்றவை, முகலாயரின், கீழ், பண்பாட்டு, காலத்தில், தோட்டப், உள்ள, வணிகர்கள், கல்லறை, தங்கம், ஆடம்பரப், இந்தியாவின், முக்கிய, வெள்ளி, இறக்குமதி, நூற்றாண்டில்