மராட்டியர்கள்
பாலாஜி விஸ்வநாத் (1713 - 1720)
ஒரு சிறிய வருவாய்த்துறை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த பாலாஜி விஸ்வநாத் 1713ல் பேஷ்வா பதவிக்கு படிப்படியாக முன்னேறினார். பேஷ்வா பதவியில் அவர் தனது நிலையை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டதோடு, அப்பதவியை வாரிசுரிமைப் பதவியாகவும் மாற்றினார். உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்த அவர் இறுதியாக ஷாகுவை மராட்டிய அரசராகவும் நியமித்தார். ஷாகுவுக்கு ஆதரவாக அனைத்து மராட்டியத் தலைவர்களின் ஆதரவையும் கோரிப்பெற்றார்.
1719ல் பாலாஜி விஸ்வநாத் முகலாயப் பேரரசர் பரூக்ஷியாரிடமிருந்து சில உரிமைகளையும் கோரிப் பெற்றார். முகலாயப் பேரரசர் ஷாகுவை மராட்டிய அரசராக அங்கீகரித்தார். மேலும், கர்நாடகம், மைசூர் உள்ளிட்ட தக்காணத்திலிருந்த ஆறு முகலாய மாகாணங்களிலும் சௌத். சர்தேஷ்முகி வரிகளை வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் பேரரசர் ஷாகுவிற்கு வழங்கினார்.
முதலாம் பாஜிராவ் (1720 -1740)
பாஜிராவ், பாலாஜி விஸ்வநாத்தின் மூத்தமகன். தமது இருபதாவது வயதிலேயே தந்தை வகித்த பதவியான பேஷ்லா பதவியில் அமர்ந்தார். அவரது காலத்தில் மராட்டியர்கள் புகழ் அதன் உச்சிக்கே சென்றது. மராட்டியத் தலைவர்கள் அடங்கிய கூட்டிணைவு ஒன்றை அவர் ஏற்படுத்தினார். அதன்படி, ஒவ்வொரு மராட்டியத் தலைவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆட்சிப் பகுதியில் தன்னாட்சி உரிமைகளைப் பெற்று ஆட்சிசெய்ய வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக, மராட்டியத் தலைவர்கள் சிலர் புகழடந்தனர், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளின் தங்களது ஆதிக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர். பரோடாவில் கெய்க் வாட், நாக்பூரின் போன்ஸ்லே, இந்தூரில் ஹோல்கர், குவாலியரில் சிந்தியா, பூனாவில் பேஷ்வா என மராட்டியத் தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் விளங்கினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , வரலாறு, மராட்டியத், மராட்டியர்கள், பாலாஜி, இந்திய, தலைவர்கள், பேரரசர், அவர், விஸ்வநாத், பேஷ்வா, முகலாயப், இந்தியா, இந்தியாவின், பாஜிராவ், மராட்டிய, மேலும், வகித்த, ஷாகுவை, பதவியில்