மராட்டியர்கள்
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் பல்வேறு கூறுகளின் பயனாக மராட்டியர்கள் எழுச்சி பெற்றனர். மராட்டிய தேசத்தின் புவியியல் கூறுகள் அவர்களுக்கேயுரிய ஒரு சிறப்பான குணத்தை தோற்றுவித்தன. மலைப்பாங்கான பகுதிகளும், அடர்ந்த காடுகளும் அவர்களை வீரமிக்கவர்களாகவும், கொரில்லாப்போர் முறையைப் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கின. மகாராஷ்டிரத்தில் பரவிய பக்தி இயக்கம் அவர்களிடையே ஒருமித்த சமய உணர்வை ஊட்டியது. துக்காராம், ராமதாஸ், வாமன் பண்டிட், ஏக்நாத் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் சமூக ஒற்றுமைக்கு வித்திட்டனர். சிவாஜியால் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது. தக்கான சுல்தானியங்களான பீஐப்பூர், அகமது நகர் போன்ற அரசுகளின் படைத்துறையிலும், ஆட்சித் துறையிலும் மராட்டியாகள் முக்கிய பொறுப்புகளை வகித்துவந்தனர். மோரேக்கள், நிம்பால்கர்கள் போன்ற செல்வாக்கு மிகுந்த பல மராட்டிய குடும்பங்களும் இருந்தன. ஆனால், வலிமை வாய்ந்த மராட்டிய அரசை உருவாக்கிய பெருமை ஷாஜிபோன்ஸ்லே மற்றும் அவரது புதல்வர் சிவாஜி இருவரையுமே சாரும்.
சிவாஜி (1627 - 1680) : வாழ்க்கையும், படையெடுப்புகளும்
சிவாஜி |
ஒரு மராட்டியத் தவைரான சாந்தாராம் மோரேயிடமிருந்து ஜாவ்ளி என்ற பகுதியை அவர் கைப்பற்றினார். இதனால், மாவ்லா பகுதியின் ஆட்சியாளரானார். 1657ல் சிலாஜி பீஜப்பூர் அரசை தாக்கி கொங்கணப் பகுதியிலிருந்து பல கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டார். சிவாஜியை முறியடிப்பதற்காக பீஜப்பூர் சுல்தான் அப்சல்கானை அனுப்பிவைத்தார். ஆனால் 1659ல் சிவாஜி மிகவும் துணிச்சலான வகையில் அப்சல்கானை எதிர்கொண்டு தாக்கி கொலைசெய்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , சிவாஜி, வரலாறு, மராட்டியர்கள், இந்திய, மராட்டிய, பீஜப்பூர், தாக்கி, அப்சல்கானை, ஆட்சியாளரானார், அரசை, இந்தியா, எழுச்சி, அவரது, தனது