பதினாறு மகாஜனபதங்கள்
பதினாறு மகாஜனபதங்கள் என்றழைக்கப்படும் பதினாறு பெரும் அரசுகள் பற்றி புத்த இலக்கியமான "அங்குத்தார நிகயம்" விவரங்களை குறிப்பிடுகிறது. அவையாவன : அங்கம், மகதம், காசி, கோசலம், வஜ்ஜி, மல்லம், சேதி, வத்சம், குரு, பாஞ்சாலம், மத்ச்யம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம் மற்றும் காம்போஜம். பதினாறு அரசுகள் பற்றி சமண நூல்களும் குறிப்பிடுகின்றன. காலப் போக்கில், சிறிய அரசுகள் வலிமையான ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்தன அல்லது அழிக்கப்பட்டன. இறுதியாக, கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் நான்கு அரசுகள் மட்டுமே எஞ்சியிருந்தன அவை வத்சம், அவந்தி, கோசலம், மகதம் என்பனவாகும்.
வத்சம்
வத்சம் என்ற அரசு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்தது. தற்கால அலகாபாத்துக்கு அருகிலுள்ள கோசாம்பி அதன் தலைநகரம். அதன் புகழ்மிக்க அரசர் உதயணன். அவந்தி, அங்கம், மகதம் ஆகிய அரசுகளுடன் மண உறவுகளை வைத்துக் கொண்டதன்மூலம் அவர் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்டார். அவரது மறைவுக்குப் பிறகு, வத்சம் அவந்தி அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
அவந்தி
அவந்தி அரசின் தலைநகரம் உஜ்ஐயினி. இதன் மிகச்சிறப்பு வாய்ந்த அரசர் பிரயோதித்யன். உதயணன் மகளான வாசவத்தத்தையை மணந்தபின் வலிமைமிக்க ஆட்சியாளரானார். இவர் புத்தசமயத்தை ஆதரித்தார். பிரயோதித்தயனுக்குப்பின் வந்தோர் திறமையற்றவர்கள். பின்னர் அவந்தியை மகதத்தின் ஆட்சியாளர்கள் இணைத்துக் கொண்டனர்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறு மகாஜனபதங்கள் , அவந்தி, பதினாறு, வரலாறு, வத்சம், அரசுகள், இந்திய, மகாஜனபதங்கள், அங்கம், இருந்தன, மகதம், தலைநகரம், அரசர், கோசலம், உதயணன், இணைத்துக், அரசின், ஆறாம், இந்தியா, நூற்றாண்டின், குடியாட்சிகள், அல்லது, பற்றி