சமன சமயம் (Jainism)
வர்த்தமான மகாவீரர் சமண பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர், வைசாலிக்கருகிலுள்ள குண்டக் கிராமத்தில், ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த சித்தார்த்தருக்கும், திரிசலைக்கும் வர்த்தமானர் மகனாகப் பிறந்தார். யசோதை என்ற பெண்மணியை மணந்த அவர் ஒரு பெண் மகவுக்கும் தந்தையானார். தனது முப்பதாவது வயதில் துறவு பூண்ட வர்த்தமானர் பன்னிரண்டு ஆண்டுகள் சுற்றியலைந்தார். 13 ஆம் ஆண்டில் தவத்தின் பலனாக 'கேவல ஞானம்' என்ற உயரிய ஆன்மீக அறிவைப் பெற்றார். அதன்பின் அவர் மகாவீரர் என்றும் ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார். அவரது சீடர்கள் சமணர்கள் எனபட்டனர். அவரது கருத்துக்கள் சமணம் என்று வழங்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தமது கருத்துக்களை மகாவீரர் பரப்பிவந்தார். தமது 72 ஆவது வயதில் ராஜகிருகத்திற்கு அருகிலுள்ள பாவா என்ற இடத்தில் அவர் மறைந்தார்.
வர்த்தமான மகாவீரர் |
சமண சமயத்தின் மூன்று முக்கிய கோட்பாடுகள் மூன்று இரத்தினங்கள் எனப்படுகின்றன. அவை :
- நல்ல நம்பிக்கை
- நல்ல அறிவு
- நல்ல நடத்தை
நல்ல நம்பிக்கை என்பது, மகாவீரரின் கருத்துக்களிலும் பேரறிவிலும் நம்பிக்கை வைத்தலாகும். நல்ல அறிவு என்பது கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு உலகத்தை படைத்தவர் எவருமில்லை என்பதையும் அனைத்து பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்பதையும் உணர்ந்து கொள்வதாகும். நல்ல நடத்தை என்பது ஐந்து முக்கிய விரதங்களை கடைப்பிடிப்பதைக் குறிக்கும். அவை :
- உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமை.
- பொய் உரைக்காமை
- களவு செய்யாமை
- சொத்துக்களை கொள்வதை விடுத்தல்
- ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமலிருத்தல்
சமண சமய சீடர்களும் மக்களும் அகிம்சைக் கோட்பாட்டை தவறாமல் கடைப்பிடித்தல் வேண்டும். உயிருள்ள, உயிரில்லா அனைத்து பொருட்களும் ஆன்மாவை பெற்றுள்ளன என்று மகாவீரர் கூறினார். அவற்றுக்கு வாழ்க்கை உண்டு எனவும், காயப்படுத்தும்போது வலியை உணர்கின்றன என்றும் கருதினர். வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்த அவர், வேத சமயத்தின் சடங்குகளை எதிர்த்தார். புனிதமான ஒழக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதின் சிறப்பை அவர் வலியுறுத்தினார். நிலம், மண் புழுக்கள், விலங்குகள் போன்றவற்றுக்கு தீங்கு விளைவதால் வேளாண்மை செய்வதுகூட பாவம் என அவர் கருதினார், அதேபோல், பட்டினி கிடப்பது, ஆடையைத் துறப்பது, தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வது போன்ற நடைமுறைகளினால் துறவற வாழ்க்கையை அதன் உச்சகட்டத்திற்கே மகாவீரர் இட்டுச் சென்றார்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமன சமயம் (Jainism), நல்ல, அவர், வரலாறு, மகாவீரர், இந்திய, என்றும், என்பது, மகாவீரரின், நம்பிக்கை, வர்த்தமான, சமயம், அறிவு, நடத்தை, வாழ்க்கையை, உண்டு, அனைத்து, என்பதையும், தீங்கு, கோட்பாட்டை, அவரது, வாழ்க்கை, சமணம், இந்தியா, jainism, வர்த்தமானர், வயதில், மூன்று, சமயத்தின், தமது, ஆண்டுகள், முக்கிய