விடுதலைக்குப்பின் இந்தியா
அணுசக்தியின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே உணர்ந்த உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1948 ஆகஸ்டில் அணுசக்தி ஆணையம் ஹோமி ஜே. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது. 1954ல் அணுசக்தி துறை ஏற்படுத்தப்பட்டது. அணுசக்தி திட்டங்களை இது நிறைவேற்றுகிறது.
ஹோமி ஜே. பாபா |
விண்வெளி ஆய்வு
விண்வெளி ஆய்விலும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. 1962ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுமம் அமைக்கப்பட்டது. தும்பாவில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. (முதல்படியாக) நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முதல் தலைமுறை இந்திய விண்வெளி ஓடத்தை (இன்சாட் - 1) இந்தியா ஏவியது. நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் வானியல் கோள் ஆய்வுக்கான தேவைகளை இன்சாட் 1ஏ மற்றும் இன்சாட் 1பி ஆகிய விண்வெளி ஓடங்கள் நிறைவேற்றி வருகின்றன.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்பம் போன்றவற்றை நிறைவேற்றுகிறது. இஸ்ரோ மையங்களிலேயே மிகப் பெரியதான திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விண்வெளி ஏவு தொழில்நுட்பத்தைப் பற்றி முதன்மை ஆய்வை மேற்கொள்கிறது. இந்திய விண்வெளி திட்டத்தின் பகுதியான விண்வெளி ஓடத் தொழில் நுட்பத்தை பெங்களூரிலுள்ள இஸ்ரோ மையம் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குக் கடற்கரைபிலுள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோலின் முக்கிய ஏவுதளமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி என்ற இடத்தில் ராக்கெட் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. நவீன ரஷ்யா தொழில் நுட்பத்தின்படி கிரையோ ஜெனிக் என்ஜின் தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றது வருகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , விண்வெளி, இந்திய, அணுசக்தி, இந்தியா, வரலாறு, மையம், ஆய்வு, தொழில், விடுதலைக்குப்பின், பாபா, இன்சாட், இஸ்ரோ, ராக்கெட், தேவைகளை, வருகின்றன, என்ஜின், நாட்டின், ஆராய்ச்சி, ஹோமி, நிறைவேற்றுகிறது, அமைக்கப்பட்டது, வருகிறது, ஏவுதளம்