விடுதலைக்குப்பின் இந்தியா
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
சுதந்திர இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. 1947க்குப்பின் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய தேவையை பிரதமர் நேரு நன்கு உணர்ந்திருந்தார். இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய 'தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்' நிறுவப்பட்டது. பல்வேறு துறைகளில் ஆய்வினை மேற்கொள்வதற்காக தொடர்ந்து அத்தகைய தேசிய ஆய்வுக் கூடங்கள் 17 ஏற்படுத்தப்பட்டன. அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தின் தலைவராக நேருவே பொறுப்பு வகித்தார்.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை முன்மாதிரியாகக் கொண்டு 1952ல் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) கோரக்பூரில் அமைக்கப்பட்டது.
பின்னர், சென்னை, பம்பாய், கான்பூர், டெல்லி ஆகிய இடங்களிலும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அறிவியல் ஆய்வுக்கும், அறிவியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆன செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஏறத்தாழ 200 ஆய்வுக்கூடங்கள் இந்தியாவில் உள்ளன. 1971 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவியல் கொள்கையை வகுக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , அறிவியல், இந்திய, வரலாறு, இந்தியா, தொழில்நுட்ப, இந்தியாவில், ஆய்வுக், இந்தியாவின், விடுதலைக்குப்பின், தேசிய, துறைகளில், ஆண்டு, மேற்கொள்வதற்காக, வளர்ச்சி, பல்வேறு, பிரதேசம், வேளாண், பிரதமர், பெரும், உற்பத்தியில், ஆகிய, நன்கு