ஹர்ஷ வர்த்தனர்
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் அரசியல் குழப்பம் நிலவியது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் வடஇந்தியாவில் ஹர்ஷ வர்த்தனர் தனது பேரரசை உருவாக்கினார்.
ஹர்ஷரது காலத்தைப் பற்றியும் அவரது வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவும் முக்கிய சான்றுகள் பாணர் எழுதிய ஹர்ஷசரிதமும், யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளுமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங். இவ்விரண்டு சான்றுகளைத் தவிர, ஹர்ஷர் எழுதியுள்ள ரத்னாவளி, நாகநந்தம், பிரிய தர்சிகா என்ற நாடகங்களும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன. மதுபென் பட்டயமும், சோன்பட் கல்வெட்டும் ஹர்ஷரது காலக்கணிப்புக்கு உதவுகின்றன. பான்ஸ்கரா கல்வெட்டில் ஹர்ஷரது கையப்பம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஹர்ஷரின் இளமைக்காலம்
ஹர்ஷ வர்த்தனர் |
பிரபாகர வர்த்தனரின் மறைவுக்குப் பின் அவரது மூத்த புதல்வர் ராஜ்ய வர்த்தனர் ஆட்சிக்கு வந்தார். தொடக்கத்திலிருந்தே அவர் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவரது தங்கை ராஜ்யஸ்ரீ கிரஹவர்ம மௌகாரியை மணந்திருந்தார். மாளவத்தின் அரசன் தேவகுப்தன், வங்காள ஆட்சியாளர் சசாங்கனின் துணையோடு கிரஹ வர்மனைக் கொன்றுவிட்டான். இச்செய்தியை கேள்விப்பட்ட ராஜ்ய வர்த்தனர் மாளவ அரசனுக்கு எதிராகப் படையெடுத்து அவனது படைகளை அழித்தான். ஆனால் தலைநகர் திரும்புவதற்கு முன்பேயே அவர் சசாங்களின் சதியால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் கணவனையிழந்த ராஜ்யஸ்ரீ காடுகளுக்கு தப்பிச் சென்றார். தானேஷ்வரத்தில் ஹர்ஷவர்த்தனர் ஆட்சிப் பொறுப்பேற்றார். தமது தங்கையைக் காப்பாற்றுவது அவரது முதல் கடமையாக இருந்தது. பின்னர் தனது தங்கையின் கணவரைக் கொன்றவர்களையும் பழிவாங்க வேண்டியிருந்தது. தீக்குளிக்கவிருந்த தங்கையை ஹர்ஷர் முதலில் மீட்டார்.
ஹர்ஷரின் படையெடுப்புகள்
தனது முதலாவது படையெடுப்பில், ஹர்ஷர் சசாங்கனை கனோஜிலிருந்து விரட்டியடித்தார். கனோஜ் நகரை தனது புதிய தலைநகராக அறிவித்தார். இதன்மூலம் ஹர்ஷர் வட இந்தியாவின் வலிமைமிக்க தலைவரானார். அடுத்து, வாலாபியைச் சேர்ந்த இரண்டாம் துருவசேனருக்கு எதிராகப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இரண்டாம் துருவசேனர் கப்பம்கட்டும் சிற்றரசரானார்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹர்ஷ வர்த்தனர் , வர்த்தனர், ஹர்ஷ, வரலாறு, அவரது, ஹர்ஷர், ஹர்ஷரது, இந்திய, தனது, அவர், பிரபாகர, வேண்டியிருந்தது, இரண்டாம், எதிராகப், ராஜ்யஸ்ரீ, கொண்டனர், ராஜ்ய, முக்கிய, பின்னர், இந்தியா, இந்தியாவின், வடஇந்தியாவில், ஏழாம், ஹர்ஷரின், யுவான், புஷ்யபூதி