ஹர்ஷ வர்த்தனர்
சுதந்திர அரசாக இருந்த சிந்துப்பகுதி மீது ஹர்ஷர் தமது அடுத்த படையெடுப்பை மேற்கொண்டார். ஆனால், அவரது சிந்துப் படையெடுப்பின் வெற்றி குறித்து சரியான தகவல்கள் இல்லை. நேபாளம் ஹர்ஷரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீரும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. காஷ்மீர் ஆட்சியாளர் தவறாது கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷர் இணக்கமான உறவைக் கொண்டிருந்தார். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷரது இறுதியான போர் நடவடிக்கையாகும்.
தமது படையெடுப்புகளின் பயனாக, ஹர்ஷர் வடஇந்தியா முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். தற்காலத்திய ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் அவரது ஆதிக்க எல்லை இன்னும் விரிவடைந்திருந்தது. எல்லைப்புற அரசுகளான காஷ்மீர், சிந்து, வாலாபி, காமரூபம் ஆகியன அவரது இறையாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.
ஹர்ஷரும் புத்த சமயமும்
யுவான் சுவாங் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹர்ஷ வர்த்தனர் , வரலாறு, ஹர்ஷர், அவரது, இந்திய, ஹர்ஷ, தமது, புத்த, அவர், யுவான், தனது, இரண்டாம், வர்த்தனர், போர், செய்தார், காஷ்மீர், இந்தியா, சுவாங், கட்டுப்பாட்டில், புத்தசமய, வெற்றி, புலிகேசியின், குறிப்புகளும், நடவடிக்கையாகும், புலிகேசி, பயணக், ஹர்ஷரின், ஏற்றுக்