குப்த பேரரசு
அலகாபாத் கற்தூண் கல்வெட்டு |
குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உள்ள உருவங்களும் சொற்றொடர்களும் குப்த மன்னர்களின் பட்டங்கள், அவர்கள் செய்த வேள்விகள் போன்ற விவரங்களைத் தருகின்றன.
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 320 - 330)
குப்த மரபை தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர். அடுத்து பதவிக்கு வந்தவர் கடோத்கஜர். இவர்கள் இருவரும் 'மகாராஜா' என்று அழைக்கப்பட்டனர். இவர்களது ஆட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. அடுத்த ஆட்சியாளர் முதலாம் சந்திரகுப்தர். மகாராஜாதிராஜா அல்லது அரசர்களுக்கு அரசன் என்று முதலில் அழைக்கப்பட்டவர். அவரது பரந்த போர்வெற்றிகளை இந்த விருது வெளிப்படுத்துவதாக உள்ளது. லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் அவர் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்டார். அக்குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவி என்ற இளவரசியை அவர் மணந்துகொண்டார். இதனால் குப்தர்களின் வலிமையும் புகழும் அதிகரித்தன. மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு அவரது பரவலான போர் வெற்றிகள் பற்றி குறிப்பிடுகிறது. கி.பி. 320 ஆம் ஆண்டு தொடங்கும் குப்த சகாப்தத்தை நிறுவியவர் முதலாம் சந்திரகுப்தர் என்ற கருத்தும் நிலவுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , குப்த, வரலாறு, கல்வெட்டு, முதலாம், அவரது, அவர், இந்திய, சந்திரகுப்தர், மெஹ்ருளி, கற்தூண், அலகாபாத், இந்தியா, பேரரசு, பற்றி, இக்கல்வெட்டு, சான்றுகள், குறிப்பிடுகிறது, இரும்புத்தூண், குப்தர்களின், சமகால