குப்த பேரரசு
அறிவியல்
ஆரியபட்டர் |
வராஹமிகிரர் ஐந்து வானஇயல் அமைப்புகளைக் கூறும் பஞ்ச சித்தாந்திகா என்ற நூலைப் படைத்தார். ஜோதிடக் கலையில் சிறந்த புலமையுடையவராகவும் அவர் திகழ்ந்தார். அவரது படைப்பான பிருகத்சம்ஹிதை வடமொழி இலக்கியத்தில் சிறந்த நூலாகப் போற்றப்படுகிறது. வான இயல், ஜோதிடம், புவியியல், கட்டிடக் கலை, வானிலை, விலங்குகள், மணமுறைகள், சகுனங்கள் என பல்வேறு தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவர் எழுதிய பிருகத்ஜாதகம் என்ற நூல் ஜோதிடக் கலைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது. மருத்துவத்துறையில் சிறந்த மேதையான வாக்பதர் குப்தர் காலத்தில் வாழ்ந்தவர். பண்டைய இந்தியாவின் மருத்துவ மும்மணிகளில் அவரும் ஒருவர். குப்தர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மற்ற இருவர் சரகரும் சூஸ்ருதரும். 'அஷ்டாங்க சம்கிரஹம்' அல்லது மருத்துவத்தின் எட்டு பிரிவுகள் என்ற நூலை வாக்பதர் எழுதியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , வரலாறு, அவர், சிறந்த, புராணம், குப்தர், இந்திய, பேரரசு, குப்த, எழுதியுள்ளார், எழுதிய, வாழ்ந்த, வானஇயல், கணிதம், ஆரியபட்டர், வாக்பதர், ஜோதிடம், ஜோதிடக், என்றும், அறிவியல், இயல், நூலை, படைத்தார், இந்தியாவின், மற்றொரு, இக்காலத்தில், இந்தியா, கூறும், நூலைப், பண்டைய, அறிஞர், விஷ்ணு, காலத்தில்