குப்த பேரரசு
பாக் குகை ஓவியங்கள் |
குப்தர் கால நாணயங்களும் சிறப்புமிக்கவை. சமுத்திரகுப்தர் எட்டு வகை நாணயங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் அவரது சாதனைகளை பறைசாற்றுகின்றன. நாணயங்கள் மீது பொறிக்கப்பட்டுள்ள உருவங்கள் குப்தர்கால நாணயவியல் ஆற்றலுக்கும் புகழக்கும் சான்றுகளாகும். இரண்டாம் சந்திரகுப்தர், தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றாலான பல்வகைப்பட்ட நாணயங்களை வெளியிட்டுள்ளார்.
இலக்கியம்
வடமொழி குப்தர் காலத்தில் ஏற்றம் பெற்றது. பிரம்மி வரிவடிவத்திலிருந்து நாகரி வரிவடிவம் வளர்ச்சி பெற்றது. காவியம், கவிதை, நாடகம், உரைநடை என பல்வேறு வடிவங்களிலான வடமொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன. வடமொழி இலக்கியங்களிலேயே மிகச் சிறந்தவை குப்தர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த சமுத்திரகுப்தர் ஹரிசேனர் உள்ளிட்ட பல அறிஞர்களை ஆதரித்தார். புகழ்மிக்க 'நவரத்தினங்கள்' இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்தனர். அவர்களில் முதன்மையானவர் காளிதாசர். 'சாகுந்தலம்' என்ற சிறப்பான வடமொழி காவியத்தை அவர் படைத்தார். அது உலகின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாளவிகாக்னிமித்ரம், விக்ரமூர்வசியம் என்ற மேலும் இரண்டு நாடகங்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் படைத்த இரு காப்பியங்கள் ரகுவம்சம் மற்றும் குமார சம்பவம். ரிது சம்ஹாரம், மேகதூதம் என்ற கவிதை நூல்களையும் அவர் இயற்றியுள்ளார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , வரலாறு, குப்தர், வடமொழி, அவர், இந்திய, குப்த, பேரரசு, வெளியிட்டுள்ளார், பொறிக்கப்பட்டுள்ள, கவிதை, நாணயங்களை, பெற்றது, இரண்டாம், பாக், வளர்ச்சி, காலத்தில், இந்தியா, உலோகக், காலத்தைச், குப்தர்கால, ஓவியங்கள், சமுத்திரகுப்தர்