குப்த பேரரசு
சமூக வாழ்க்கை
இந்தியாவில் குப்தர்கள் ஆட்சிக்கு முன்பு அயலவர் படையெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. அத்தகைய அயல்நாட்டவர்க்கு இந்திய சமுதாயம் இடமளித்து அவர்களை இந்தியாவிலேயே தங்கவும் அனுமதித்தது. ஆனால், குப்தர் காலத்தில் ஜாதிமுறை மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டது. பிராமணர்கள் சமுதாயத்தில் உயர் அங்கம் வகித்தனர். ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும் அவர்களுக்கு ஏராளமான கொடைகளை வாரி வழங்கினர். தீண்டாமை வழக்கம் இக்காலத்தில்தான் மெல்ல வளரத்தொடங்கியது. சண்டாளர்கள் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டதாக பாஹியான் கூறியுள்ளார். இத்தகைய கொடுமை பற்றி சீனப் பயணி விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
குப்தர் காலத்தில் மகளிர் நிலைமையும் மோசமடைந்தது. புராணங்கள் போன்ற சமயநூல்களைப் படிப்பதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை. ஆண்களுக்கு பெண்கள் அடிமை என்ற வழக்கம் நன்கு வேரூன்றியது. ஆனால், பெண்கள் ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருணையுடன் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 'சுயம்வரம்' நடத்தும் பழக்கம் கைவிடப்பட்டது. மனுஸ்மிரிதி பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , வரலாறு, இந்திய, குப்தர், குப்த, பாஹியான், மிகவும், பேரரசு, அவர்களுக்கு, வழக்கம், பெண்கள், என்றும், காலத்தில், எவ்வித, இந்தியா, ஆட்சி, முடிந்தது, இல்லை