குப்த பேரரசு
பிற வெற்றிகள்
வங்கத்தில் தனது எதிரிகளின் கூட்டிணைவை இரண்டாம் சந்திரகுப்தர் முறியடித்தார். சிந்து நதியைக் கடந்து சென்ற அவர் பாக்டிரியாவைக் கைப்பற்றினார். அங்கு ஆட்சிபுரிந்த குஷானர்களை அடிபணியச் செய்தார். இத்தகைய வெற்றிகளினால், குப்தப் பேரரசு மேற்கு மாளவம், குஜராத் கத்தியவார் வரை மேற்கில் பரவியது. வடமேற்கில் பேரரசின் எல்லை இந்து குஷ் மலைக்கப்பால் பாக்டிரியா வரை பரவியிருந்தது. கிழக்கே வங்காளத்தின் கிழக்குப் பகுதிவரையும், தெற்கே நர்மதை நதியை எல்லையாகக் கொண்டும் குப்தப் பேரரசு விளங்கியது.
பாஹியானின் வருகை
பாஹியான் |
பல்வேறு கோணங்களில் பாஹியானது குறிப்புகள் பயனுடையவை என்றபோதிலும், இரண்டாம் சந்திரகுப்தன் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் விவகாரங்களில் அவர் அதிக அக்கறை காட்டவில்லை. அவரது முதன்மை நோக்கம் சமயத்தைப் பற்றியதேயாகும். அவர் எதனையும் புத்தசமய நோக்கிலேயே மதிப்பிட்டார். சமூக நிலைமை பற்றிய அவரது கூற்றுக்கள் மிகையானவை. இருப்பினும், நாட்டின் பொதுவான நிலைமைகளை அறிந்து கொள்ள அவரது குறிப்புகள் பயனுள்ளவையாகத் திகழ்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , அவர், வரலாறு, குப்தப், பேரரசு, இரண்டாம், இந்தியாவிற்கு, பேரரசின், இந்திய, அவரது, குப்த, புத்தசமய, பாஹியான், கங்கைச், நன்கு, கூறியுள்ளார், குறிப்புகள், இந்தியா, குறிப்பிட்டுள்ளார், சமூக, இந்தியாவில், பேரரசில், வந்தார், விளங்கியது, சந்திரகுப்தர்