குப்த பேரரசு
வரலாற்றின் ஏடுகளில் சமுத்திரகுப்தரின் போர் வெற்றிகள் குறிப்பிடத்தக்கவையாகும். தனிப்பட்ட சாதனகைளிலும் அவர் புகழ்மிக்கவராகவே திகழ்ந்தார். எதிரிகளை அவர் பெருந்தன்மையுடன் நடத்தியமை, அவரது கூரிய அறிவு, புலமை, இசையில் மேதமை போன்றவற்றை அலகாபாத் கல்தூண் கல்வெட்டு விவரமாகக் குறிப்பிடுகிறது. பாடல்களை இயற்றும் திறனைப் பெற்றிருந்த அவரை 'கவிராஜன்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவரது நாணயங்களில் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. இசையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. ஹரிசேனர் உள்ளிட்ட பல்வேறு புலவர்களையும், அறிஞர்களையும் அவர் ஆதரித்தார். தனது மரபுக்கே உரிய பண்பான வடமொழியைப் போற்றி ஆதரிக்கும் பண்பையும் அவர் பெற்றிருந்தார். சிறந்த வைணவராகத் திகழ்ந்த அவர், பிற சமயப் பிரிவுகளையும் சகிப்புத்தன்மையுடன் நடத்தினார். புத்த சமயத்தின்மீது பற்றுக் கொண்டிருந்த அவர், புகழ்மிக்க புத்தசமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்தார்.
இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380 - 415)
சந்திரகுப்தர் II |
அரசியல் வெல்திறனும் போர் ஆற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற அவரால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது. திருமண உறவுகள் மூலம் தனது அரசியல் வலிமையை அவர் பெருக்கிக்கொண்டார். மத்திய இந்தியாவின் நாக இளவரசி குபேரநாகா என்பவரை அவர் மணந்து கொண்டார். தனது புதல்வி பிரபாவதியை வாகாடக மரபு அரசன் இரண்டாம் ருத்ரசேனருக்கு மணமுடித்துக் கொடுத்தார். தக்காணத்தில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் வாகடர்கள் ஆட்சி புரிந்தனர் என்ற அடிப்படையில் இந்த மணஉறவு அரசியல் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. இரண்டாம் சந்திரகுப்தர் மேற்கு இந்தியாவில் சாகர்களுக்கு எதிராக படையெடுத்துச் சென்றபோது இந்த மண உறவும் வாகாடர்களின் நட்பும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
மேற்கு இந்தியாவை வெற்றிகொள்ளல்
சந்திரகுப்தர் II நாணயம் |
மேற்கு இந்தியாவை வெற்றிகொண்டதின் விளைவாக பேரரசின் மேற்கு எல்லை அரபியக் கடல்வரை நீண்டது. இதனால், புரோச், சோபரா, காம்பே உள்ளிட்ட துறைமுகங்கள் குப்தப் பேரரசின் எல்லைக்குள் வந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , அவர், இரண்டாம், மேற்கு, வரலாறு, சந்திரகுப்தர், தனது, அவரது, இந்திய, குப்தப், குப்த, அரசியல், பேரரசு, பேரரசின், ஆட்சிக்கு, மூலம், இந்தியாவை, முக்கியத்துவம், ஆற்றலும், ஆதரித்தார், வெற்றிகள், போர், இந்தியா, இந்தியாவின், இசையில், கல்வெட்டு, கொண்டிருந்த, உள்ளிட்ட, குறிப்பிடுகிறது, என்பவரை