இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம்
இந்தியத் துணைக்கண்டம் ஒரு தெளிவான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது, இமாலய மலைகள், இந்தோகங்கைச் சமவெளி தென்னிந்திய தீபகற்பம் என அதனை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். இத்துணைக் கண்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான் என்ற ஐந்து நாடுகள் உள்ளன. அவற்றில் இந்தியாவே பெரியதாகும். 30 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும் கொண்டதாக அது விளங்குகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடிக்கும் மேலாகும்.
இமாலய மலைகள் (The Himalayan Mountains)
இமாலய மலைகள் |
படையெடுப்புகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் இயற்கைத் தடுப்பாக இமயமலைகள் இருந்துவந்தன என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது. ஆனால், வடமேற்கு மலைகளில் காணப்படும் கைபர், போலன், குர்ரம், கோமல் போன்ற கணவாய்கள் இந்தியாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் எளிய வழித்தடங்களாக அமைந்துள்ளன. இந்துகுஷ் சுலைமான், கிர்தார் மலைத்தொடர்களில் இக்கணவாய்கள் உள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இக்கணவாய்கள் மூலம் போக்குவரத்து நடைபெற்றன. படையெடுப்பாளர்களும் குடியேறிகளும் இக்கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்தோ - ஆரியர்கள், இந்தோ - கிரேக்கர்கள், பார்த்தியர்கள், சாகர்கள், குஷானர்கள், ஹூணர்கள், துருக்கியர்கள் போன்றோர் இக்கணவாய்கள் மூலமே இந்தியா வந்தனர். இப்பகுதியிலுள்ள 'ஸ்வாத்' பள்ளத்தாக்கும் ஒரு முக்கிய வழித்தடமாகும். மாசிடோனியாவின் அலெக்சாண்டர் இவ்வழியாகத்தான் இந்தியாமீது படையெடுத்தார். படையெடுப்பாளர்களைத் தவிர சமயப் பரப்பாளர்களும், வணிகர்களும்கூட இவ்வழித்தடங்கள் மூலமாக இந்தியாவுக்கு வந்தனர். எனவே இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்புக்கும் பண்பாட்டுத் தொடர்புக்கும் வடமேற்கு மலைகளிலுள்ள கணவாய்கள் வழிவகுத்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம், இந்திய, புவியியல், இந்தியாவின், வரலாறு, மலைகள், இமாலய, இக்கணவாய்கள், இந்தியா, இதன், மீட்டர்களாகும், மத்திய, தாக்கம், வரலாற்றில், இந்தியாவைப், பாதுகாக்கும், வந்தனர், வடமேற்கு, கணவாய்கள், இந்தோ, தொடர்புக்கும், பகுதியில், முக்கிய, நிர்ணயிக்கின்றன, ஆண்டு, மக்கள், கிலோ, அமைந்துள்ளன, வழியாக