இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம்
காவிரிப் பள்ளத்தாக்கு |
தென்னிந்திய தீபகற்பம் நீண்ட கடற்கரையைக் கொண்டிருப்பதால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டுவந்தனர். பண்டைக்காலம் தொட்டே, கடல் வாணிபம் இப்பகுதியில் செழித்தோங்கியது. கிழக்கே, ஜாவா, சுமத்திரா, பர்மா, கம்போடியா போன்ற பகுதிகளுடன் வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. வாணிபம் தவிர இந்தியக் கலை, சமயம், பண்பாடு போன்றவையும் இப்பகுதிகளுக்கு பரவியது. தென்னிந்தியாவிற்கும், கிரேக்க - ரோமானியருக்கும் இடையே நிலவிய வர்த்தகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பு வரலாற்றுப் புகழ்வாய்ந்தவையாகும்.
இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை கானும் நாடு (India – A Land of Unity in Diversity)
வேற்றுமையில் ஒற்றுமை |
பண்டைக் காலத்திலிருந்தே இந்தியாவில் பல சமயங்கள் இருந்துள்ளன. பண்டைய இந்தியாளில் இந்துசமயம், சமண, புத்த சமயங்கள் புகழ்பெற்றிருந்தன. ஆனால் பண்பாட்டளவில் இவை ஒன்றோடொன்று கலந்துவிட்டிருந்தன. இந்திய மக்கள் பல்லேறு மொழிகளைப் பேசினாலும் சமயங்களைப் பின்பற்றினாலும், சமூகப் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டிருந்தாலும் நாடு முழுவதும் ஒரு சில பொதுப் பண்புள்ள வாழ்க்கை முறையைக் காணமுடிகிறது. எனவே நமது நாட்டில் வேற்றுமை களுக்கிடையே ஒற்றுமையுணர்வு மேலோங்கியுள்ளது என்று துணிந்து கூறலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம், இந்திய, வரலாறு, பல்வேறு, புவியியல், வரலாற்றில், காவிரிப், ஒன்று, நதிகள், தாக்கம், பள்ளத்தாக்கு, இந்தியா, தென்னிந்திய, பண்டைய, ஒற்றுமை, வேற்றுமையில், வாணிபம், தொடர்பு, நாடு, சமயங்கள், கலந்துவிட்டன, ஆரியருக்கு, மக்கள், பண்பாடு, காணமுடிகிறது, நதிகளின், கிருஷ்ணா, விளங்கியது, தீபகற்பத்தின், பாய்கின்றன, காலத்திலிருந்தே, பண்டைக், இப்பகுதியில்