முந்தைய இடைக்கால இந்தியா
ரஜபுத்திர அரசுகள்
ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்ற ரஜபுத்திரர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முஸ்லிம் படையெடுப்பு வரை வலிமையுடன் திகழ்ந்தனர். அதற்குப் பின்னரும். பல ரஐபுத்திர அரசுகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன. முஸ்லிம் ஆக்ரமிப்பின்போது இந்து சமயத்தையும் பண்பாட்டையும் காத்து நின்றவர்கள் ரஜபுத்திரர்களேயாவர்.
ரஜபுத்திரர்களின் தோற்றம் குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. அந்நியப் படையெடுப்பாளர்கள் மற்றும் இந்திய ஷத்திரர்கள் ஆகியோரின் வழிவந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது. அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்திய மயமாக்கப்பட்டு இந்திய சமுதாயத்தில் இரண்டறக் கலந்தனர். ரஜபுத்திரர்கள் பற்றிய பல பழங்கதைகள் இக்கருத்தை ஆதரிப்பதாக உள்ளன. ஆகவே, ரஐபுத்திர குலம் பல்வேறு கூறுகளின் கலப்பே என்று கூறுலாம். கலப்பு மணங்களின் மூலமாகவும், பொதுவான பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்ததாலும் அவர்கள் ஓரே குலமாக உருவெடுத்தனர். போர்த் தொழிலையும் அவர்கள் பின்பற்றத் தொடங்கினர். இருப்பினும், வணிகமும் வேளாண்மையும்கூட செழித்தன. நகரங்களில் நடைபெற்ற வணிகம் மற்றும் செல்வ வளம் பற்றி அராபியப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். பலம் வாய்ந்த கோட்டைகளையும் அவர்கள் கட்டிக் கொண்டனர்.
ரஜபுத்திர அரசுகளில் காலத்தால் முந்தையது கூர்ஜர பிரதிகார அரசாகும். ஹரிஸ் சந்திரன் அதன் முக்கிய தலைவர். ராஜபுதனத்தில் பரந்த நிலப் பகுதிகளைக் கைப்பற்றிய அவர் பின்மால் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். கூர்ஜரர்களில் பல பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவு குஜராத்திலும், மற்றது அவந்தியிலும் ஆட்சி புரிந்தன. வங்காளத்தின் பாலர்களுடனும், தக்காணத்தின் ராஷ்டிரகூடர்களுடனும் அவர்கள் போரிட்டனர். ரஜபுத்திர இனத்திலேயே வீரமிக்கவர்களான சௌகன்கள் ஆஜ்மீரில் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைசிறந்த அரசன் விக்ரஹராஜன். அவர் டெல்லியை கைப்பற்றினார். எனவே, கோரி முகமதுவின்கீழ் முஸ்லிம்கள் படையெடுத்து வந்தபோது சௌகன்கள் அவர்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இக்காலத்திய மற்றொரு முக்கிய ரஜபுத்திரப் பிரிவினர் பரமாரர்கள். அவர்களது சிறந்த அரசன் போஜன். அவரது போர்வெற்றிகளும் பண்பாட்டுப் பங்களிப்பும் ரஜபுத்திர வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளன.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முந்தைய இடைக்கால இந்தியா , இந்திய, வரலாறு, இந்தியா, ரஜபுத்திர, ஆட்சி, முக்கிய, அரசுகள், இந்தியாவில், இடைக்கால, முந்தைய, அந்நியப், படையெடுப்பாளர்கள், பிரிவினர், அரசன், சௌகன்கள், ரஐபுத்திர, அவர், ஆதிக்கம், இருந்தனர், பல்வேறு, காஷ்மீர், எட்டாம், ரஜபுத்திரர்கள், நூற்றாண்டில், முஸ்லிம்