டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்டு, நன்கு விரிவடைந்தபோது வலிமையும், திறமையும் மிக்க ஆட்சி முறையும் வளரத் தொடங்கியது. டெல்லி சுல்தானியம் அதன் உச்ச கட்டத்தில் இருந்தபோது அதன் ஆதிக்கம் தெற்கே மதுரை வரை இருந்தது. டெல்லி சுல்தானியம் வீழ்ச்சியடைந்த பிறகுகூட அதன் ஆட்சி முறைக் கூறுகள் பிராந்திய அரசுகளிலும். பின்னர் முகலாயர் ஆட்சி முறையிலும் காணப்பட்டன.
இஸ்லாமிய சமயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாக டெல்லி சுல்தானியம் விளங்கியது. டெல்லி சுல்தான்கள் தங்களை காலிப்புகளின் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர். குத்பா என்ற வழிபாட்டு சடங்கின்போதும், நாணயங்களிலும் காலிப்பின் பெயர் இடம் பெற்றது. பால்பன் தம்மை கடவுளின் நிழல் என்று கூறிக் கொண்டாலும், நாணயங்களில் காலிப்பின் பெயரை பொறிக்கத் தவறவில்லை. இல்துத்மிஷ், முகமது பின் துக்ளக், பிரோஸ் துக்ளக் ஆகியோர் காலிப்பிடமிருந்து அனுமதிக் கடிதங்களையும் பெற்றனர்.
ஆட்சி முறையில் சுல்தானின் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராணுவம், சட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் அவரே இறுதி முடிவுகளை எடுத்தார். அக்காலத்தில் தெளிவான வாரிசுரிமை முறை காணப்படவில்லை. அனைத்து ஆண்மக்களும் அரியணைக்குப் போட்டியிட்டனர். இல்துத்மிஷ் தனது புதல்வர்களை விட்டுவிட்டு மகள் ரசியாவை தனது வாரிசாக நியமித்தார். ஆனால், வாரிசுகளும், வாரிசுக்கான நியமனங்களும் உயர்குடியினரின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது. அரியணைக்கு வாரிசுகளை நியமிப்பதில் சில சமயங்களில் உலேமாக்களும் முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும், ராணுவ வலிமையே, வாரிசுரிமைப் போட்டியின்போது முக்கிய காரணியாக இருந்தது.
மத்திய அரசாங்கம்
ஆட்சித் துறையில் சுல்தானுக்கு உதவியாக பல்வேறு துறைகளும் அதிகாரிகளும் இருந்தனர். நாயப் என்ற பதவி மிகுந்த அதிகாரமுள்ளதாகும். சுல்தானைப் போல அனைத்து அதிகாரங்களையும் பெற்று விளங்கிய நாயப் அனைத்து துறைகளையும் தமது பொதுவான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவருக்கு அடுத்த நிலையில் திவானி விசாரத் என்ற நிதித் துறைக்குப் பொறுப்பான வாசிர் என்ற அதிகாரி இருந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , டெல்லி, வரலாறு, இந்தியா, ஆட்சி, சுல்தானியம், இந்திய, அனைத்து, சுல்தானியத்தின், கீழ், தனது, நாயப், முக்கிய, இஸ்லாமிய, காலிப்பின், இல்துத்மிஷ், துக்ளக், பதவி